உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது வரை 30 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதிக கேட்ச் விட்ட அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாண்டு 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.
5 போட்டிகளில் விளையாண்டு 4 வெற்றியுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே போட்டி இருக்கும். அடுத்து வரும் போட்டிகளின் வெற்றி - தோல்விகளை பொறுத்து, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றுடன் நடையைக் கட்டுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், நேற்று வரை நடந்து முடிந்த 30 போட்டிகளிலும் மோசமான பீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச் கோட்டை விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிக கேட்ச் கோட்டைவிட்ட அணிகளின் பட்டியல்
பாகிஸ்தான் அணி மொத்தம் கிடைத்த 26 கேட்ச்களில் 14 கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. இது 35 சதவிகிதமாகும்.
இங்கிலாந்து அணி மொத்தம் கிடைத்த 42 கேட்ச்களில் 10-ஐ கோட்டை விட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
இந்திய அணி 15 கேட்சுகளில் 1-ஐ மட்டுமே கோட்டைவிட்டுள்ளது. இதனால், பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.
Also See...
தோனி -கேதர் ஜாதவ் திணறல் பேட்டிங்! அதிருப்தி தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்
'வாழ்க்கை ஒரு வட்டம்' - விஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.