1992 உலகக்கோப்பையில் நடந்தது போல தற்போது கிடைத்த வெற்றி... சாம்பியன் கனவில் பாகிஸ்தான்..!

ICC Cricket World Cup | கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் ஆசம், 101 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

news18
Updated: June 27, 2019, 7:27 AM IST
1992 உலகக்கோப்பையில் நடந்தது போல தற்போது கிடைத்த வெற்றி... சாம்பியன் கனவில் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் வீரர்கள்
news18
Updated: June 27, 2019, 7:27 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணி முதலாவது தோல்வியை பெற்றுள்ளது. 

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மன்றோ 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


Loading...
நிதானமாக ஆடிய வில்லியம்சன் 41 ரன்களையும், கிராண்ட்ஹோம் 64 ரன்களையும் எடுத்தனர். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நீஷம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிவரை ஆட்டமிழக்காத அவர், 97 ரன்களைக் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் சமன், 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம்-உல்-ஹக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், முகம்மது ஹபீஸ் 32 ரன்களிலும், ஹாரிஸ் சோகைல் 68 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 49.1 ஓவர்களில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் ஆசம், 101 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இதற்கு முன்னதாக, கடந்த 1992-ம் ஆண்டில் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றது. அப்போது, தொடக்கத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை, அதன் தற்போதைய வெற்றி, தோல்வி என்பது 1992-ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போன்றே உள்ளது.

இதனால், இந்த முறை உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also See...

இது எங்களுடைய உலகக்கோப்பை - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...