ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்…

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்…

விராட் கோலி

விராட் கோலி

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அற்புதமாக அதிரடி சதம் விளாசி கடந்த போட்டியில் கவனம் பெற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முன்னேற்றம் கண்டுள்ளார். இதேபோன்று கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சாளர் முகம்மது சிராஜின் வரிசையும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் கொடுத்த சில கேட்ச்சுகளை இலங்கை வீரர்கள் பிடிக்க தவறினர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். இந்நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 83 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்திற்கு சென்றுள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனா அற்புதமாக அதிரடி சதம் விளாசி கடந்த போட்டியில் கவனம் பெற்றார். இலங்கை அணி தோல்வி அடைந்தாலும், ஷனகாவின் ஆட்டம் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவர் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 61ஆவது இடத்தில் உள்ளார்.

பவுலிங்கில் கலக்கிய இந்திய அணியின் முகம்மது சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் பவுலருக்கான தர வரிசையில் 4 இடங்கள் முன்னேறி 18 ஆவது இடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

டி20 போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் நீடிக்கிறார். பவுலர்களில், இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் ஹசரங்கா 2ஆவரு இடத்திற்கு சென்றுள்ளார். முதலிடம் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன ரஷித் கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket, Virat Kohli