ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேப்டன்களின் தலை தப்பித்தது...! ஐசிசியின் அடுத்த அதிரடியான முடிவு... அமலுக்கு வருகிறது புதிய விதி

கேப்டன்களின் தலை தப்பித்தது...! ஐசிசியின் அடுத்த அதிரடியான முடிவு... அமலுக்கு வருகிறது புதிய விதி

ஐசிசி

ஐசிசி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது.

காயம் காரணமாக வீரர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் செய்ய ஐசிசி அனுமதி வழங்கி இருந்தது.

இந்த புதிய விதியால் காயம் காரணமாக போட்டியிலிருந்து வீரர்கள் விலகினாலும் அந்த அணிக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. இதை தொடர்ந்து அடுத்த புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

போட்டியில் தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு தான் அபராதம் மற்றும் தண்டனை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து போட்டிகளில் தாமதாக பந்துவீசி வந்தால் அந்த அணியின் கேப்டன் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டும் வந்தது.

அந்த விதியை தற்போது ஐசிசி மாற்றி உள்ளது. தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கு ஒரே மாதிரியான தண்டனை வழங்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

ஐசிசியின் புதிய விதிமுறை

தாமதாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டன் விளையாட தடைவிதிக்கபட மாட்டார்கள்

தாமதாக பந்துவீசும் அணியினல் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக தண்டிக்கப்படுவார்கள். கேப்டனுக்கு கொடுக்கும் தண்டனையே அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்படும்.

டெஸ்ட் சாம்பியன் தொடரின் போது தாமதமாக அணிகள் பந்துவீசினால் ரன்ரேட் அடிப்படையில் பின்னால் இருக்கும் அணியின் புள்ளியிலிருந்து 2 புள்ளிகள் கழிக்கப்படும்.

Also Read : “ராணுவ பணிக்கு செல்கிறேன்... மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை“ - தோனி

Published by:Vijay R
First published:

Tags: Cricket