• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Match Fixing | இந்திய சூதாட்ட தரகரிடமிருந்து லஞ்சம்: பாகிஸ்தானில் பிறந்த 2 யுஏஇ கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை

Match Fixing | இந்திய சூதாட்ட தரகரிடமிருந்து லஞ்சம்: பாகிஸ்தானில் பிறந்த 2 யுஏஇ கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை

8 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட யுஏஇ வீரர் அமீர் ஹயாத்.

8 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட யுஏஇ வீரர் அமீர் ஹயாத்.

இந்திய சூதாட்ட தரகர்களிடமிருந்து லஞ்சம் பெற்றப் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் 2 வீரர்களுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது ஐசிசி.

  • Share this:
    இந்திய சூதாட்ட தரகர்களிடமிருந்து லஞ்சம் பெற்றப் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் 2 வீரர்களுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது ஐசிசி.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் அமீர் ஹயாத், அஷ்ஃபக் அகமெட் என்ற இரண்டு கிரிக்கெட் வீரர்கள் டி20 உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்ய இந்திய தரகரிடமிருந்து பணம் பெற்ற அதிர்ச்சி புகார்கள் வெளியாகின.

    பாகிஸ்தானில் பிறந்த இந்த இரண்டு வீரர்கள் மீது ஐசிசி செப்டம்பர் 13, 2020-ல் ஊழல் குற்றச்சாட்டை வைத்தது. இரண்டு வீரர்களும் இந்திய சூதாட்டத் தரகரிடமிருந்து 15,000 திர்ஹாம் அதாவது சுமார் 4083 அமெரிக்க டாலர்கள் மேட்சை பிக்ஸ் செய்ய லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்து நிரூபிக்கப்பட்டது. ஐசிசி குற்றப்பத்திரிக்கையில் இந்த இந்திய தரகரை மிஸ்டர் ‘ஒய்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Also Read: 29 ஆண்டுகால உலக சாதனை உடைந்தது: 400மீ தடை ஓட்டத்தில் நார்வே தடகள வீரர் அபாரம்

    குற்றம்சாட்டப்பட்ட ஹயாத் வேகப்பந்து வீச்சாளர் ஆவார், அகமது பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இத்தனைக்கும் இவர்கள் ஐசிசி நடத்திய ஊழல் எதிர்ப்பு வகுப்புகளையும் அட்டெண்ட் செய்துள்ளனர், அங்கு உட்கார்ந்து தலையைத் தலையை ஆட்டிவிட்டு நேராக வெளியே வந்தவுடன் கை நீட்டியுள்ளனர். சூதாட்டத்தரகர் கையூட்டியுள்ளார்.

    Also Read: ஆன்லைன் வகுப்புகள் வெற்றியா?- இந்தியாவில் 22% பள்ளிகளில்தான் இண்டெர்நெட் வசதி- ஆய்வில் தகவல்

    மிஸ்டர் ஒய் என்ற இந்திய சூதாட்டத் தரகருக்கும் இந்த யுஏஇ வீரர்க்ளுக்கும் இடையிலான வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றமே இருவரும் அகப்படக் காரணமாக இருந்துள்ளது.

    இந்நிலையில் இந்த இருவருக்குமான 8 ஆண்டுகால தடை மற்ற வீரர்களுக்கான எச்சரிக்கை என்று கூறியுள்ளது ஐசிசி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: