ஐசிசி –யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஜாஸ் பட்லருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் சித்ரா அமீன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார். இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணம்.
இதன் அடிப்படையில் இந்த இருவரும் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை பெறுகின்றனர். நவம்பர் மாத தொடக்கத்தின்போது, 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ஜாஸ் பட்லர், நியூசிலாந்து அணிக்கு எதிராக 47 பந்துகளை மட்டுமே சந்தித்து 73 ரன்களை அதிரடியாக குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…
இதேபோன்று இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 49 பந்துகளை சந்தித்து 80 ரன்களை அதிரடியாக சேர்த்த ஜாஸ் பட்லர் அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 26 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ரசிகருக்கு வித்தியாசமான முறையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி… வைரல் வீடியோ…
ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது-
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற, எனக்கு வாக்கு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கிலாந்து அணி வீரர்களே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் குழுவாக இணைந்து திறமையை வெளிப்படுத்தியதால் தான் எங்களால் 20 ஓவர் உலக கோப்பை வெல்ல முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ICC, ICC Ranking