பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரன்-மெஷின் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் மார்ச்-2022-ற்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாதாந்திர சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை தட்டிச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பல பரபரப்பான பேட்டிங் ஆட்டங்களைத் தொடர்ந்து ஆஸம் ஆடவர் ஐசிசி மாதாந்திர் சி
றந்த வீரர் விருதை வென்றார்.பரபரப்பான டெஸ்ட் தொடரில் 390 ரன்கள் குவித்தது மற்றும், இரண்டாவது டெஸ்டில் 196 ரன்கள் எடுத்த அவரது சாதனை இன்னிங்ஸால் அவரது உச்ச பங்களிப்பு சிறப்பிக்கப்பட்டதோடு கராச்சியில் கடைசி நாளில் பாகிஸ்தான் ட்ரா செய்ய பெரும் பங்களிப்பு செய்தது.
இதோடு மார்ச் மாதம் நடந்த ஒருநாள் தொடரிலும் வெளுத்துக் கட்டினார் பாபர் அசாம், ஒரு அரைசதம் மற்றும் ஒரு மாபெரும் சதம் அதாவது 71 பந்துகளில் சதம் கண்ட பாபர் ஆசம் 114 ரன்களை எடுக்க 348 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக பாகிஸ்தான் கடந்து வென்று புதிய பாகிஸ்தான் சாதனையைப் படைத்தது. ஆஸ்திரேலியாவின் வலிமையான பந்து வீச்சுத் தாக்குதலுக்கு தனிநபராக பாபர் ஆசம் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார் .
சக வேட்பாளர்களான கிரேக் பிராத்வைட் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரை பின்னுக்குத் தள்ளிஅஸாம் இந்த விருதைப் பெறுகிறார், மேலும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் முடிசூட்டப்பட்ட பிறகு, இரண்டு முறை ICC ஆடவர் மாதத்திற்கான விருதை வென்ற முதல் வீரர் ஆனார் பாபர் ஆசம், முதலில் ஏப்ரல் 2021-ல் ஒருமுறை ஐசிசி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பாபர்.
அதே போல் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஏழாவது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிப் பாதையில் பலமான பங்களிப்புகளைத் தொடர்ந்து ரேச்சல் ஹெய்ன்ஸ், ஐசிசியின் இந்த மாதத்தின் மகளிர் வீராங்கனை ஆனதைக் கொண்டாடுகிறார். எட்டு போட்டிகளில் 61.28 சராசரியில் 429 விலைமதிப்பற்ற ரன்களை எடுத்தார் ரேச்சல் ஹெய்ன்ஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, ICC Ranking, Pakistan Cricketer