ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சூர்ய குமார் முதல் ரேனுகா சிங் வரை.. ஐசிசி விருதுகளை தட்டித்தூக்கிய இந்திய வீரர்கள்!

சூர்ய குமார் முதல் ரேனுகா சிங் வரை.. ஐசிசி விருதுகளை தட்டித்தூக்கிய இந்திய வீரர்கள்!

சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது அறிவிப்பு

சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருது அறிவிப்பு

ஐசிசி கடந்த ஜனவரி 23(திங்கட்கிழமை) முதல் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து வருகிறது. இதில் சிறந்த டி20 வீரராக இந்தியாவின் சூர்ய குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் வீரர் பட்டியலில், மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரேனுகா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி கடந்த ஜனவரி 23(திங்கட்கிழமை) முதல் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தேர்வுக்குழுவினராலும், ரசிகர்களின் வாக்கெடுப்பிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்கிறது ஐசிசி. இந்நிலையில் 13 பிரிவுகளுக்கான முடிவுகளை நேற்று வெளியிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இதில், 31 டி20 போட்டிகளில் விளையாடி, 187.63 ஸ்ரைக்ரேட்டுடன் 1164 ரன்களை எடுத்து 46.56 ஆவரேஜை வைத்திருக்கும் சூர்ய குமார் யாதவை 2022ற்கான சிறந்த டி20 வீரராக ஐசிசி தேர்வு செய்துள்ளது.

இதேபோல ஓடிஐ போட்டிகளில் 4.62 எக்கனாமியுடன், 14.88 ஆவரேஜ் என 18 விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரேனுகா சிங் மகளிர் பிரிவில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார்.

ஆடவர் பிரிவில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்கோ யான்சன் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BCCI, ICC, ICC Ranking, Indian cricket team, Suryakumar yadav