காயமடைந்து வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலைத் தீர்க்க புதிய விதியை அமல்படுத்தும் ஐசிசி!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளதால் இந்த தொடரில் முதன்முதலாக இந்த விதி அமலுக்கு வருகிறது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 3:23 PM IST
காயமடைந்து வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலைத் தீர்க்க புதிய விதியை அமல்படுத்தும் ஐசிசி!
FILE IMAGE
Web Desk | news18
Updated: July 19, 2019, 3:23 PM IST
கிரிக்கெட் போட்டிகளில் காயம்பட்டு வெளியேறும் வீரர்களால் அணிக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க ஐ.சி.சி புதிய விதியை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஒரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங், பவுலிங் செய்து வந்தனர். இவர்களில் யாருக்கும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் ஃபீல்டிங் மட்டுமே செய்வார். பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய அவருக்கு வாய்ப்பளிக்கப்படாது.

போட்டியின் போது ஒரு வீரர் காயம் காரணமாக விளையாடாமல் வெளியேறினால் அவர் ரிட்டையர்டு ஹர்ட் என அறிவிக்கப்படுவார். இதனால் வீரர் காயம்படும் அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சில் சிக்கல் நீடித்துவந்தது.


Also Read: சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

தலையில் பலமாக அடிப்பட்டு வீரரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த மாற்றுவீரர்க்கு பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். இதேபோன்று பந்துவீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நீண்ட நாட்கள் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் ஐசிசி தற்போது இந்த விதிக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆடும் லெவன் அணியில் எந்த வீரராவது பலத்த காயம் காரணமாக வெளியேறினால் மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம், பந்துவீசலாம்.

Loading...

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளதால் இந்த தொடரில் முதன்முதலாக இந்த விதி அமலுக்கு வருகிறது.

Also Read : எங்களுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும் - தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து

Also See...

பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்!தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...