முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி ரேங்கிங்கில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

ஐசிசி ரேங்கிங்கில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

ICC T20I தரவரிசை: டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 கிரிக்கெட்  பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச  டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தொடர்ந்து நம்பர் 1 இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.   ரிஸ்வான் 825 புள்ளிகள் என்ற வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய பின்னர், முதலிடத்தில் நீண்ட காலம் நீடித்து வருகிறார். செவ்வாய்கிழமை மொஹாலியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 பந்துகளில் 46 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் முன்னேறினார்.

புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி, இவர் ரிஸ்வானை விட 45 புள்ளிகளும் மார்க்ராமை விட 12 புள்ளிகளும் பின்தங்கி உள்ளார் . இதற்கிடையில், முதல் டி20யில் 55 ரன்களை குவித்த பிறகு, சமீபத்திய பேட்டிங் தரவரிசையில் கேஎல் ராகுல் 5 இடங்கள் உயர்ந்து 18வது இடத்தைப் பிடித்தார். டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்தார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டிகளில் தொடர்ந்து குறைந்த ஸ்கோர்களை எடுத்து வருவதால் பேட்டிங் தரவரிசையில் பாபர் ஆசாம் வீழ்ச்சி கண்டுள்ளார்.

இதையும் படிங்க: பந்தில் இனி எச்சில் தடவுவதற்கு நிரந்தரத் தடை: பேட்டிங் டீமுக்கு 5 பெனால்டி ரன்கள்- அமலுக்கு வருகிறது ஐசிசியின் புதிய விதிகள்

ஆசிய கோப்பையில் பாபர் 6 போட்டிகளில் 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். டி20 போட்டிகளில் ஐசிசி பேட்டிங் தரவரிசை1. முகமது ரிஸ்வான் - 825 ரேட்டிங் புள்ளிகள் 2. ஐடன் மார்க்ரம் - 792  3.சூர்யகுமார் யாதவ் - 780 4. பாபர் ஆசம் - 771 5. டேவிட் மாலன் - 725 6. ஆரோன் பிஞ்ச் - 715 14. ரோஹித் சர்மா - 602 16. விராட் கோலி - 591 18. கேஎல் ராகுல் - 587

First published:

Tags: ICC Ranking, Kl rahul, Rohit sharma, T20, Virat Kohli