ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை அட்டவணை : இந்திய அணி மோதும் போட்டிகளின் விவரம்

டி20 உலகக்கோப்பை அட்டவணை : இந்திய அணி மோதும் போட்டிகளின் விவரம்

இந்திய அணி- கோப்புப் படம்

இந்திய அணி- கோப்புப் படம்

T20 World Cup | டி20 உலகக்கோப்பை 2022 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

 • 1 minute read
 • Last Updated :

  2022ம் ஆண்டுகான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த முறை இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடத்தப்படவுள்ளன.

  டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் 8 அணிகள் நேரடியாகவும் 4 அணிகள் தகுதி சுற்றுகள் மூலம் தேர்வாகும். ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் நேரடியாகவும் நமிபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று வரவேண்டிய சூழலில் உள்ளன.

  அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. வரும் அக்டோபர் 23ம் தேதியன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  இந்திய அணி போட்டிகள்

  அக்டோபர் 23: இந்தியா vs பாகிஸ்தான்

  அக்டோபர் 27: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி

  அக்டோபர் 30: இந்தியா vs தென்னாப்பிரிக்கா

  நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்

  நவம்பர் 6: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup