2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் அறிவிப்பு- இந்திய அணிக்கு என்னென்ன போட்டிகள்?

இந்திய அணி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றான 2021-23 டெஸ்ட் தொடர்களை ஐசிசி அறிவித்துள்ளது, இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளை இந்தியாவிலும், வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை அந்த நாடுகளிலும் சந்திக்கிறது. இதோடு புதிய புள்ளிகள் விவரங்களையும் அறிவித்துள்ளது ஐசிசி.

  • Share this:
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சுற்றான 2021-23 டெஸ்ட் தொடர்களை ஐசிசி அறிவித்துள்ளது, இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளை இந்தியாவிலும், வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை அந்த நாடுகளிலும் சந்திக்கிறது. இதோடு புதிய புள்ளிகள் விவரங்களையும் அறிவித்துள்ளது ஐசிசி.

    Also Read: விராட் கோலி நம்பர் 1 டெஸ்ட் கேப்டனா?- சாதகமான  ஆட்டக்களங்கள், பலவீனமான அணிகளுடனேயே அதிக வெற்றிகள்

    முதல் தொடர் போலவே இரண்டாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் 9 அணிகள் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடும், அதாவது 3 டெஸ்ட் தொடர்களை தங்கள் நாட்டிலும் 3 டெஸ்ட் தொடர்களை வெளிநாட்டிலும் ஆட வேண்டும்.

    நடப்பு டெஸ்ட் சாம்பியன்களான நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை தங்கள் நாட்டிலும், இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியாவை அந்தந்த நாடுகளிலும் சந்திக்கும்.

    போட்டி அட்டவணை:



    விராட் கோலிக்கு சோதனைகள் காத்திருக்கிறது ஏனெனில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரே இங்கிலாந்துடன் 5 போட்டிகளில் மோதுவதாக அமைந்ததே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே வேளையில் கடந்த தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற வலுவான இந்திய அணியை வீழ்த்துவதும் இங்கிலாந்துக்கு பெரிய சவால்தான், எதுவும் சுலபமல்ல. கடந்த முறை நூலிழையில் இறுதிப் போட்டியை தவறவிட்டோம் என்றும் இந்த முறை நிச்சயம் இறுதியில் ஆட கூடுதல் முயற்சி செய்வோம் என்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

    ரூட், கேன் வில்லியம்சன், விராட் கோலி மூவருமே டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு வீரனாக ஆட்கொள்வதற்கு சரியான, சவாலான வடிவம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published: