முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜனவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு…

ஜனவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு…

சுப்மன் கில்

சுப்மன் கில்

ஜனவரி மாதத்தில் மட்டும் 567 ரன்களை ஒட்டுமொத்தமாக சுப்மன் கில் குவித்துள்ளார். இவற்றில் 3 சதங்கள் அடங்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கில்லை தேர்வுசெய்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுப்மன் கில்லின் பேட்டிங் பாராட்டும் வகையில் அமைந்தது.

ஜனவரி மாதத்தில் மட்டும் 567 ரன்களை ஒட்டுமொத்தமாக சுப்மன் கில் குவித்துள்ளார். இவற்றில் 3 சதங்கள் அடங்கும். நீண்ட காலத்திற்கு பின்னர் இந்திய அணியில் அட்டாக்கிங் தொடக்க பேட்ஸ்மேனாக சுப்மன் கில் கிடைத்துள்ளார். கடந்த மாதத்தில் குறிப்பாக ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 149 பந்துகளில் 208 ரன்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் சுப்மன் கில்.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் சுப்மன் கில், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே, இந்திய அணியின் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் கில்லின் பெயரை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது- ஜனவரி மாதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிறந்த வீரருக்கான விருதை அறிவித்து இந்த மாதத்தை மறக்க முடியாத ஒன்றாக ஐசிசி மாற்றியுள்ளது. நம்முடைய திறமை அங்கீகரிக்கப்படும்போது நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த தருணத்தில் ஐசிசி என்னை கவுரவப்படுத்தியுள்ளது மறக்க முடியாததாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket