• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐசிசி அட்டவணை : இந்தியாவில் மூன்று தொடர், 29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர்

ஐசிசி அட்டவணை : இந்தியாவில் மூன்று தொடர், 29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர்

ஐசிசி டிராபி

ஐசிசி டிராபி

ஐசிசியின் அடுத்து வரவிருக்கும் நான்கு டி20 உலகக் கோப்பைகள், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்தும் நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    2024 முதல் 2031 வரையிலான 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு 2026 T20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் டிராபி, 2031 உலகக்கோப்பை ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடக்கின்றன. ஐசிசியின் அடுத்து வரவிருக்கும் நான்கு டி20 உலகக் கோப்பைகள், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்தும் நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2021 தொடர் முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஐசிசி வரும் பத்தாண்டுகளுக்கான முக்கிய போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2024 முதல் 2031 வரையிலான 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையில் இந்தியா அதிகபட்சமாக மூன்று ஐசிசி தொடர்களை நடத்துகிறது.

    பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. 2025 ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு இந்தியா, இலங்கையுடன் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை நடத்தியது. அதற்குபின் பயங்கரவாதத்தை காரணமாக காட்டி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அச்சம் தெரிவித்து வந்தது.

    மேலும் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அமெரிக்காவில் நடைபெற உள்ளது. 2024 டி20 கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் நமீபியா போன்ற நாடுகளும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை நடத்த ஐசிசி வாய்ப்பு வழங்கி உள்ளது. 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது.

    ஐசிசி கிரிக்கெட் அட்டவணை

    1. 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

    2. 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான்

    3. 2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை

    4. 2027 ஒரு நாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

    5. 2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

    6. 2029 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா

    7. 2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

    8. 2031 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, பங்களாதேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: