2023-ம் ஆண்டுக்கான போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி முடிவு..!

ஐசிசி

கொரானாவால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

 • Share this:
  2023-ம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

  கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகி வருகின்றன. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

  இதுகுறித்து தொலைபேசி வாயிலாக ஐசிசி நிர்வாகிகள் குழு நேற்று ஆலோசனை மேற்கொண்டது. அதில் கொரோனாவால் போட்டிகள் ரத்தாவது தவிர்க்க முடியாத ஒன்று என்றும், அதேசமயம் ரத்தாகும் தொடர்களை பிற்காலத்தில் முடிந்தவரை நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

  இதற்கு ஏற்றபடி 2023-ம் ஆண்டு வரையிலான ஐசிசி அட்டவணையை மாற்றியமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   
  Published by:Vijay R
  First published: