முகமது சிராஜை சத்தம் போட்ட பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்

சிராஜ்.

லஷ்மனிடம் நான், ‘இன்னும் ஹைதராபாதுக்கே ஆடவில்லை இல்லையா’ என்றேன். நீங்கள் இவரைப் பயன்படுத்தலாமே என்றேன்.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் பெற்ற வரலாற்று தொடர் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் ஹைதராபாதைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். தன் தந்தையின் இழப்பையும் தாங்கிக் கொண்டு அங்கு அவர் நாட்டுக்காக போராடினார்.

  அந்தத் தொடரின் மூன்று கண்டுப்பிடிப்புகளில் சிராஜ், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அடங்குவர். இந்திய பவுலிங் பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த பாரத் அருண், ‘சிராஜிடம் கோபமும்,வேட்கையும் உள்ளது, அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஜொலிப்பார்’ என்றார்.

  இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேசிய பந்து வீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண் கூறியதாவது:

  சிராஜுக்கு சர்வதேச அளவில் வெற்றி பெறுவதற்கான வேட்கையும் உண்டு கோபமும் உண்டு. நான் ஆர்சிபியில் அவரை நெட் பவுலராகப் பார்த்தேன். அப்போடு விவிஎஸ் லஷ்மணிடம் நான் சொன்னேன், ‘இந்தப் பையன் பிரமாதமாக வீசுகிறான்’ என்று. லஷ்மனிடம் நான், ‘இன்னும் ஹைதராபாதுக்கே ஆடவில்லை இல்லையா’ என்றேன். நீங்கள் இவரைப் பயன்படுத்தலாமே என்றேன்.

  ஹைதராபாத் கோச்சாக சென்ற போது சிராஜை அழைத்தேன். அப்போது சிராஜ் உத்தேச அணியில் கூட இல்லை. மீண்டும் அவர் பந்து வீசுவதைப் பார்த்த போது மேலும் ஈர்க்கப்பட்டேன். நான் அன்று எப்படி பார்த்தேனோ அதே வேகம் உத்வேகத்துடன் சிராஜ் வீசினார். சிராஜ் ஆடியே ஆகவேண்டும் என்றேன் நான்.

  சிராஜிடம் இன்னொரு பலம் என்னவெனில் நாம் இதைச் செய் என்றால் உடனே செய்து விடுவார், இப்படி வீசு என்றால் அப்படி வீசுவார். ஆனால் சிலவேளைகளில் தானாகவே சில பல சோதனை முயற்சிகளி ஈடுபடுவார், அப்போது நான் அவரைச் சத்தம் போடுவேன். சிராஜின் வெற்றிக்குக் காரணம் அவரது தன்னம்பிக்கைதான், என்றார் பாரத் அருண்.
  Published by:Muthukumar
  First published: