விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்: கபில்தேவ் சொன்ன நல்ல செய்தி

நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என கூறியுள்ளார்.

விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்: கபில்தேவ் சொன்ன நல்ல செய்தி
கபில் தேவ்
  • Share this:
இந்தியாவுக்கு முதல் முறை கிரிக்கெட் உலக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில்தேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள fortis Escorts இதய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு இருதய ஆன்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது. கபில்தேவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், தன் மீது அக்கறையும், அன்பும் காட்டிய அனைவருக்கும் கபில்தேவ் நன்றி தெரிவித்துள்ளார். உங்களது அன்பால் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்றும் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்ததது. இந்திய கிரிக்கெட் கபில் தேவின் சாதனைகள் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி உள்ள கபில் தேவ் 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த ஆல்-ரவுண்டரான கபில் தேவ் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தியும் உள்ளார்.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading