Home /News /sports /

தோனியின் பினிஷர் இடத்தை பிடிப்பேன் - ரியான் பராக் உறுதி

தோனியின் பினிஷர் இடத்தை பிடிப்பேன் - ரியான் பராக் உறுதி

ரியான் பராக்

ரியான் பராக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 0-2 என்று பின் தங்கியிருக்கும் நிலையில் மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்குப் பதிலாக, இதுவரை ஆடாத மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களும் சொதப்பி வருகிறார்கள். இந்நிலையில் சர்ச்சைகள் பலவற்றை தன் உடல்மொழி மூலம் உருவாக்கி வரும் ரியான் பராக் நேர்மையாக தன்னைப் பற்றி பேசியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    இது தொடர்பாக ரியான் பராக் கூறும்போது, “நான் எனது அணிக்காக ஓரிரு போட்டிகளில் வெற்றிப் பங்களிப்புச் செய்தேன், ஆனால் அது போதாது.

    எனது அணிக்காக ஆறு-ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நான் பரிசீலிக்கப்படுவேன். இப்போது, ​​இந்திய அணிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் என் பெயர் வந்தால் கூட அது சரியாக இருக்காது. நான் இப்போது அதற்கு தகுதியற்றவன். வரும் சீசனில், எனது அணியை மேலும் வெற்றிகளுக்கு வழிநடத்தினால், எனது நம்பிக்கை உயரும் பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதை பற்றி நான் சிந்திக்க முடியும்.

    இப்போது நான் பேட்டிங்கில் இறங்கும் நிலை குறித்து திருப்தியாகவே இருக்கிறேன். ஆனால் நான் பேட் செய்யும் விதம் பற்றி எனக்கு திருப்தி இல்லை. அந்த 6-7 ஸ்பாட் எனக்கானது என்ற நிலையை உருவாக்க வேண்டும், அந்த நிலையில் இறங்க நான் உரிமை கொண்டாட வேண்டும்.

    இப்போதைக்கு 6-7 அல்லது பினிஷர் ரோலில் எம்.எஸ்.தோனி பெயர் மட்டுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும், ஏனெனில் அவர்தான் பினிஷர். அவர் பினிஷராகத் தன்னை நிறுவிக்கொண்டார். நான் அந்த நிலை நோக்கி முன்னேறி வருகிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன், அடுத்த ஆண்டு முதல் என் அனுபவம் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவேன்.

    நான் உள்நாட்டு சீசனுக்கு அசாமுக்காக தயார் ஆக வேண்டும். ஒன்று இரண்டு நல்ல சீசன்கள் போதாது, சீராக திறமை வெளிப்பட வேண்டும். பிறகு ஐபிஎல் தொடர் அப்போதுதான் இந்தியாவுக்கு ஆட முடியும். இப்போதைக்கு இலக்கு உள்நாட்டு கிரிக்கெட் அடுத்த ஐபிஎல் தொடர்தான் எனக்கு” என்றார் ரியான் பராக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி