இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு நண்பரும் சக வீரருமான பென் ஸ்டோக்ஸுக்கு ஜோ ரூட் வியாழக்கிழமை தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு முன்னாள் கேப்டன் ஒரு சமூக ஊடக பதிவில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரூட்.
டெஸ்ட் அணியில் ரூட்டின் துணை கேப்டனாக பணியாற்றிய ஸ்டோக்ஸ், கடந்த 17 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுப் போராடும் இங்கிலாந்து அணிக்கு பொறுப்பேற்க மிகவும் துணிச்சலுடன் சம்மதித்துள்ளார். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபமாக சரியாக ஆடுவதில்லை. அடிக்கடி காயமடைந்து விடுவார், மன அழுத்தத்துக்கு அடிக்கடி ஆளாபவர் அவர் எப்படி இங்கிலாந்து போன்ற ஒரு டீமை கையாள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், ரூட் ட்விட்டரில் பென் ஸ்டோக்ஸை வாழ்த்துவதற்காக ஒரு இதயப்பூர்வமான செய்தியை வெளியிட்டார். அவர் "எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வந்துள்ளோ. வாழ்த்துக்கள் நண்பரே, ஒவ்வொரு அடியிலும் நான் உங்களுடன் சரியாக பயணிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார் ஜோ ரூட்.
ஸ்டோக்ஸின் முதல் கேப்டன்சி பணி ஜூன் 2 முதல் லண்டனில் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடராகும். ஜூலையில், கடந்த ஆண்டு இந்தியாவுடன் பாதியில் முடிந்த டெஸ்ட் தொடரின் மீதமுள்ள டெஸ்டில் ரோஹித் சர்மா தலைமையிலான டீம் இந்தியாவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துவார்.
அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ஸ்டோக்ஸ் தனது நண்பரையும் முன்னோடியையும் ஒரு சிறிய அறிக்கையில் பாராட்டினார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். "இது ஒரு உண்மையான பாக்கியம் வரும் கோடையில் நாட்டுக்காக கிரிக்கெட்டை கேப்டனாகத் தொடங்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக ஜோ ரூட் செய்த அனைத்திற்கும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுக்கான சிறந்த தூதராக எப்போதும் இருப்பதற்கும், நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். டிரஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக எனது வளர்ச்சியில் அவர் பெரிய பங்காக இருந்து வருகிறார், மேலும் அவர் இந்த பாத்திரத்தில் எனக்கு ஒரு முக்கிய கூட்டாளியாக தொடர்ந்து இருப்பார், என்று ஜோ ரூட்டை பாராட்டினார் பென் ஸ்டோக்ஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England test, Joe Root