Home /News /sports /

#Rohit Sharma- ஷார்ட் பிட்ச் எகிறு பந்து போட்டால் சிக்ஸ்தான் - இங்கிலாந்துக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை

#Rohit Sharma- ஷார்ட் பிட்ச் எகிறு பந்து போட்டால் சிக்ஸ்தான் - இங்கிலாந்துக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை

ரோஹித் சர்மா சிக்ஸ்

ரோஹித் சர்மா சிக்ஸ்

ஓவலில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை நோ-லாஸில் அடித்து நொறுக்கியது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா 58 பந்துகளில் 5 ஹூக் சிக்ஸர்களுடன் 76 நாட் அவுட் என்று பின்னி எடுத்தார். தவான் 31 நாட் அவுட். ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் என்று எகிறு பந்துகளை வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர் இங்கிலாந்து பவுலர்கள்.

மேலும் படிக்கவும் ...

    இது தொடர்பாக நேற்று ஆட்டம் முடிந்து ரோஹித் சர்மா கூறுகையில், “பிட்சையும் பார்த்தேன் வானும் மேக மூட்டமாக இருந்ததால் பீல்டிங் எடுப்பதுதான் சிறந்த முடிவு என்று தோன்றியது. ஆனால் ஒரு பக்கம் கண்டிஷன்கள் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை, டி20 தொடரில் பிளாட் பிட்ச்களைப் பார்த்தோம்.

    இன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அருமையான நாள். பவுலர்களுக்கு பிட்சிலிருந்து என்ன மாதிரியான உதவிகள் கிடைக்கும் என்று கணிக்க வேண்டும் ஸ்விங், பவுன்ஸ் அதற்கேற்ப களவியூகம் பந்து வீச்சு மாற்றம் என்று திட்டமிட வேண்டும். நம் பவுலர்களின் தரம் என்னவென்று நமக்குத் தெரியும்.

    நானும் ஷிகர் தவானும் நிறைய சேர்ந்து ஆடியிருக்கிறோம் எங்களுக்குள் புரிதல் அதிகம் அந்த முதல் ரன் அவுட் வாய்ப்பு தவிர. அவர் அனுபவஸ்தர்.

    ஷார்ட் பிட்ச் பந்துகள், எகிறு பந்து வீசும் உத்தி பற்றி கூறியாக வேண்டும். புல், ஹூக் ஷாட் ரிஸ்க் ஷாட்தான் இருந்தாலும் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வருவது வரட்டும் என்று ஹூக், புல்ஷாட்களை ஆடினேன், ஒருவிதத்தில் போடட்டும் அடிப்போம் என்றே இருந்தேன். இந்த மாதிரி பந்துகள் வருவதையும் அதனை அடிப்பதில் எனக்கு சக்சசும் இருக்கும் வரை மகிழ்ச்சிதான்” என்றார் ரோஹித் சர்மா.

    நேற்று ஆட்டம் பகலிரவு என்றே பேரே தவிர பகலிலேயே முடிந்து விட்டது. டெஸ்ட் போட்டியில் 377 ரன்களை சேஸ் செய்து ஜெயித்து விட்டு இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் பேச்சா பேசினர், அதற்கு தக்கப் பதிலடி நேற்று கிடைத்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India captain Rohit Sharma, India Vs England

    அடுத்த செய்தி