Home /News /sports /

2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்ப தோனி வகுத்த அபார உத்தி - ஹர்பஜன் ரீ கால்

2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்ப தோனி வகுத்த அபார உத்தி - ஹர்பஜன் ரீ கால்

உமர் அக்மலை வீழ்த்திய ஹர்பஜன், தோனி அருகில்

உமர் அக்மலை வீழ்த்திய ஹர்பஜன், தோனி அருகில்

2011 உலகக்கோப்பையை மறக்க முடியுமா? 1983க்குப் பிறகு தோனி படை உலகக்கோப்பையை 2வது முறையாக வென்ற தருணம், அதை விட முக்கியமான தருணம் பாகிஸ்தானை 2022 உலகக்கோப்பை அரையிறுதியில் வீழ்த்தியதுதான் என்கிறார் ஹர்பஜன்சிங், அதுவும் தான் கொஞ்சம் உணர்வற்ற நிலையில் இருந்த போது கேப்டன் தோனி கொடுத்த ஒரு அறிவுரையால் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்றார் ஹர்பஜன் சிங்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    2011 உலகக்கோப்பையை மறக்க முடியுமா? 1983க்குப் பிறகு தோனி படை உலகக்கோப்பையை 2வது முறையாக வென்ற தருணம், அதை விட முக்கியமான தருணம் பாகிஸ்தானை 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் வீழ்த்தியதுதான் என்கிறார் ஹர்பஜன்சிங், அதுவும் தான் கொஞ்சம் உணர்வற்ற நிலையில் இருந்த போது கேப்டன் தோனி கொடுத்த ஒரு அறிவுரையால் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்றார் ஹர்பஜன் சிங்.

    இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது, ஆனால் மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி மோதலே அதிகம் பேசப்பட்டது. ஐஎஸ் பிந்த்ரா சர்வதேச அரங்கம் முழு வீச்சில் காணப்பட்டது மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் போன்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் உட்பட பலர் பார்வையாளர்கள் பகுதியை அலங்கரித்தனர்.

    காலிறுதியில் அப்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற பிறகு, இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, சச்சின் டெண்டுல்கரின் 115 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க, பாகிஸ்தானுக்கு 261 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. சச்சின் டெண்டுல்கரின் மோசமான இன்னிங்ஸ் இது என்றே கூற வேண்டும், கிட்டத்தட்ட 3 முறை அவருக்கு வாழ்வளிக்கப்பட்டது, ஆனால் இடையிடையே அபாரமான ஷாட்களையும் ஆடினார் சச்சின் டெண்டுல்கர்.

    பதிலுக்குத் பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் என்று தடுமாறியது. மிஸ்பா-உல்-ஹக், உமர் அக்மலுடன் அபாயகரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தொடங்கினார். உமர் அக்மல் இரண்டு சிக்ஸர்களை அடித்ததால் இந்திய அணிக்கு பிரஷர் எகிறியது, அணிக்கு மட்டுமா, ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களுக்கும் டென்ஷன் எகிறியது.

    ஹர்பஜன் அன்று சரியாக வீசவில்லை 5 ஒவர் 26-27 ரன்கள் கொடுத்திருந்தார், ஆனால் தோனி அவரையே அழைத்தார், “நான் அன்று ஏதோ உணர்வற்று இருந்தேன், ட்ரிங்க்ஸ் பிரேக் வந்தது, தோனி என்னிடம் வந்து ரவுண்ட் த விக்கெட்டில் வீசு பஜ்ஜுபா என்றார். மிஸ்பாவும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர், உமர் அக்மலும் நன்றாக ஆடினர். இவர்கள் கூட்டணி அபாயகரமாக இருந்தது.

    நான் பந்து வீச வந்தேன், கடவுளை வேண்டினேன், நான் வெற்றி பெற கடவுளிடம் வேண்டினேன், கடவுளும் என் கோரிக்கையை கேட்டார், ஏற்றார், முதல் பந்திலேயே ரவுண்ட் த விக்கெட்டில் உமர் அக்மல் ஆட்டமிழந்தார். அவர் முற்றிலும் பந்தை மிஸ் செய்தார்.” என்றார் ஹர்பஜன் சிங்.

    உமர் அக்மல் போன பிறகே பாகிஸ்தான் பேட்டிங் சிதறியது. மிஸ்பா மட்டுமே 76 பந்தில் 56 என்று அச்சுறுத்தினார். பாகிஸ்தான் 231 ரன்களுக்குச் சுருண்டது. வெளியேறியது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Harbhajan Singh, ICC world cup, India vs Pakistan, MS Dhoni

    அடுத்த செய்தி