கிரிக்கெட் வாழ்க்கைக்கு மறுபிறவி கொடுத்தது சி.எஸ்.கே - பிராவோ உருக்கம்

"பொதுவாக போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் புறக்கணிக்கப்படுவீர்கள்; ஒருவிதமான அழுத்தத்தை சந்திப்பீர்கள். ஆனால், சி.எஸ்.கே அணியில் அப்படி நடந்ததே இல்லை"

கிரிக்கெட் வாழ்க்கைக்கு மறுபிறவி கொடுத்தது சி.எஸ்.கே - பிராவோ உருக்கம்
தோனியுடன் பிராவோ
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தாலும் நாள்தேரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களையும், நினைவுகளையும் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் சி.எஸ்.கே. அணியின் செல்லப்பிள்ளை பிராவோ, அணியுடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம், ஒருநாள், டி 20 போட்டிகளில் அணியில் இடம் கிடைக்கவில்லை என சர்வதேச வாழ்க்கை தத்தளித்து வந்த சூழ்நிலையில் சி.எஸ்.கே அணியில் இணைந்தது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மறுபிறப்பு என்று உணர்ச்சிப்பொங்க கூறியுள்ளார் பிராவோ.

சி.எஸ்.கே. அணி தனது கிரிக்கெட் வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்துள்ளது. அணியில் இணைந்த பிறகு அதிக விக்கெட் வீழ்த்தி இரண்டு முறை பர்ப்பிள் தொப்பி, இரண்டு முறை கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தொடர்ந்து தனது திறமையை  நிகழ்த்தியன் மூலம் இழந்த கிரிக்கெட் வாழ்க்கை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உலகில் தனது பெயர் நிலைக்க சிஎஸ்கே  வழிவகை செய்தது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃபிளம்மிங்-ன் தலைமை என பிராவோ மெய்சிலிரிக்க தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


பொதுவாக போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் புறக்கணிக்கப்படுவீர்கள். ஒருவிதமான அழுத்தத்தை சந்திப்பீர்கள். ஆனால், சி.எஸ்.கே அணியில் அப்படி நடந்ததே இல்லை எனவும், அழுத்தம் ஒரு போதும் கொடுத்ததே இல்லை எனவும் கூறினார்.
தோனி, ஃபிளம்மிங்  இருவரும் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் திறமைசாலியாக இருப்பதால் தான் இங்கு இருக்கிறீர்கள், உங்களை நிரூபிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம். வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும் என அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்துவதே அணி,  குடும்பமாக மாறுவதற்கு உறுதுணை என தெரிவித்துள்ளார்.தோனி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என்னுடைய திறமையை முழுமையாக தெரிந்துவைத்திருப்பவர். சுதந்திரமாக செயல்பட வைப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் புதிதாக முயற்சி எடுக்கும் போது பயப்படமாட்டார். நம்பிக்கையுடன் செயல்படுவார். உலகின் தலைசிறந்த கேப்டன் என தோனியுடனான நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

தோனிக்கு  நான் நிறைய கடமைபட்டிருக்கிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் அவருக்காக எதாவது செய்ய விரும்புகிறேன். தோனி நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு முன் மாதிரி எனவும் புகழாரம் சூட்டினார்.
First published: April 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading