என் மீது நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி - ஷேன் வாட்சன்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

என் மீது நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி - ஷேன் வாட்சன்
வாட்சன்
  • News18
  • Last Updated: April 24, 2019, 11:04 AM IST
  • Share this:
CSKஎன் மீது நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி என்று சென்னை அணியின் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்தார்.


இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டுபிளிஸிஸ் களமிறங்கினர். டுபிளிஸிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடினார். அவர் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை வெற்றி பெற்றது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வாட்சன் முதல் 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடியிருந்தார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல குரல்கள் எழுந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார் ஷேன் வாட்சன். 96 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய ஷேன் வாட்சன், ‘நான் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாதது எனக்கே புரிந்தது. இந்நேரம் நான் மற்ற அணிகளில் இருந்திருந்தால் கண்டிப்பாக என்னை நீக்கிருப்பார்கள். ஆனால் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஃப்ளமிங் என்மீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Also watch

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்