Home /News /sports /

நானும் 2 முச்சதங்கள் அடித்திருக்கிறேன்; யார் கொண்டாடுகிறார்கள்?: இன்னொரு கோலியின் சோகக் கதை

நானும் 2 முச்சதங்கள் அடித்திருக்கிறேன்; யார் கொண்டாடுகிறார்கள்?: இன்னொரு கோலியின் சோகக் கதை

தர்வார் கோலி, விராட் கோலி.

தர்வார் கோலி, விராட் கோலி.

இந்திய பேட்டர் விராட் கோலி தனது U-19 நாட்களில் 2008 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்தியபோது பேசுபொருளானார். அவர் இதுவரை இல்லாத சாதனைகளைச் செய்த போது அவர் காலத்தில் ஆடிய , அவருடன் ஆடிய பலர் ​​பின்தங்கி விட்டனர், திறமையின்மையினால் அல்ல. ஒருவேளை அதிக திறமையுடைவர்கள் என்பதால் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீரர்தான் U-19 அணி வீரர் தர்வார் கோலி (Taruwar Kohli)

மேலும் படிக்கவும் ...

    தர்வார் கோலியினால் பெரிய ஐபிஎல் ஒப்பந்தங்களைப் பெற முடியவில்லை, அவரது உள்நாட்டு சாதனைகளும் கவனிக்கப்படாமல் போனது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் பற்றிப் பேசிய தருவர், சமூக ஊடகங்கள் அப்போது ஒரு விஷயமே இல்லை என்றும், அதனால் தனது சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்றார். .

    நான் இரண்டு முரை முச்சதங்களை அடித்துள்ளேன் - ஒன்று பஞ்சாபிற்காகவும் மற்றொன்று மிசோரமுக்காகவும் - ஆனால் அப்போது சமூக ஊடகங்கள் இல்லாததால், அவை மகிமைப்படுத்தப்படவில்லை மற்றும் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டன. ஆனால் கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது.

    “நாங்கள் உலகக் கோப்பையில் (2008 இல் 19 வயதுக்குட்பட்டோர்) விளையாடும் போது, ​​நாங்கள் இன்னும் சில டாட் பால்களை விளையாடினோம். ஆனால், இன்று மாறிப்போய் விட்டது. இன்று நீங்கள் மூன்று டாட் பால் விளையாடினால், நிர்வாகத்துக்கும் உங்கள் மேல் சந்தேகம் தான் வரும்.

    அப்போது கிரிக்கெட் அவ்வளவு வேகமானதாக இல்லை. 300 ரன்கள் அவ்வளவு சகஜமாக எடுக்க முடியாது. . உண்மையில், 230 நல்ல ஸ்கோராகவேக் கருதப்பட்டது. ஐபிஎல் வந்தவுடன் ஆட்டம் ஸ்பீட் எடுத்தது. அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடித்தான் ஆகவேண்டும் வேறு வழியே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆட்டம் மாறிப்போனது, நாமும் வளர்ந்து விட்டோம்.

    நாம் அனைவரும் தனிப்பட்ட பந்தயங்களில் ஓடுகிறோம். நான் விராட் கோலியின் டீம்மேட் என்பதால் ஒப்பீடுகள் எப்போதும் இருக்கும். ஆனால், கண்ணாடியில் என்னைப் பார்க்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது, மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை.

    விராட் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற விதம், பெருமை அவரையே சாரும். அவர் நிறைய ரன்கள் குவித்து, மக்கள் விரும்பும் அவரது சதத்திற்கான காத்திருப்புக்கு முடிவு கட்ட விரும்புகிறேன்.” என்றார் தர்வார் கோலி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி