Home /News /sports /

எங்க காலத்தில் விராட் கோலி போல ஒரு வீரர் இல்லை - 1983 உலகக்கோப்பை லெஜண்ட் கருத்து

எங்க காலத்தில் விராட் கோலி போல ஒரு வீரர் இல்லை - 1983 உலகக்கோப்பை லெஜண்ட் கருத்து

சையத் கிர்மானி

சையத் கிர்மானி

விராட் கோலி போன்ற ஒருவீரர், தொடர்ந்து 3 வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்தவர், 3 வடிவங்களிலும் ரன்களைக் குவித்தவர் எப்படி திடீரென பார்ம் அவுட் ஆக முடியும், இது எப்படி நடந்திருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் 1983 உலகக்கோப்பை வென்ற லெஜண்ட் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி.

மேலும் படிக்கவும் ...

    அன்று டி20யில் இறங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சரை அடுத்தடுத்து விளாசினார் அதிலும் ஒரு சிக்ஸ் ஒதுங்கிக் கொண்டு நேராக அடித்தது சச்சின் ஷார்ஜாவில் காஸ்பரோவிச்சை அடித்ததை நினைவூட்டியது. அந்த சிக்ஸ் மைதான கூரை மீது போய் விழுந்தது, இந்த சிக்ஸ் அதே போல் இருந்தாலு நீளமான பவுண்டரி என்பதால் சைட் ஸ்க்ரீன் வரை சென்றது, சரி பார்முக்கு வருகிறார் என்று நினைக்கும் போது பட்லரின் ஸ்மார்ட் பீல்ட் செட் அப்புக்கு ஷார்ட் கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து ஒருநாள் போட்டியில் அவர் நிச்சயம் இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் காயம் என்று சொல்லப்பட்டது, அவருடைய ஃபிட்னெஸ் ட்ரெயினிங்குக்கெல்லாம் அவர் காயமடைந்து விட்டார் என்பதெல்லாம் பெரிய ஜோக் என்பது கூடவா நமக்குப் புரியாது, இருந்தாலும் வேறு காரணம் என்ன கூற முடியும், அத்தனை பெரிய வீரரை ட்ராப் என்றா கூற முடியும்?

    இந்நிலையில் அவர் பார்ம் அவுட் ஆகியிருப்பது குறித்து வேதனை தெரிவித்த சையத் கிர்மானி, “சீராக விராட் கோலி ரன்கள் எடுக்கிறார் என்று நான் கருதினேன். அனைத்து வடிவங்களிலும் அவர் ஒரு வெற்றிகர பேட்டர். எங்கள் காலத்தில் எல்லாம் விராட் கோலி போல ஒரு சீரான பேட்டரை பார்த்தது கிடையாது.

    விராட் கோலி இத்தனை காலம் ஒரு பார்ம் அவுட்டில் இருப்பார் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இப்படி உலகத்தரம் வாய்ந்த ஒரு விராட் கோலி நீண்ட காலம் பார்ம் அவுட் ஆகியிருக்கக் கூடாது.

    ஆனால் அவரை உலகக்கோப்பை டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும் ஏனெனில் அவர் ஒரு ரோல் மாடல். நல்ல ஆக்ரோஷமானவர், உத்வேகம் அளிப்பவர் அணிக்கு இளம் வீரர்கள் இருக்கும்போது விராட் கோலி தேவை. இளமையும் அனுபவமும் ஒன்று சேர வேண்டும். இளம் வீரர்கள் கோலியிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்.” என்றார் சையத் கிர்மானி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி