கோப்பையை கையில் ஏந்திய போது கண் கலங்கிவிட்டேன் - நடராஜன் உருக்கம்

கோப்பையை கையில் ஏந்திய போது கண் கலங்கிவிட்டேன் - நடராஜன் உருக்கம்

தங்கராசு நடராஜன்

விராட் கோலி தன்னிடம் பந்தை அளித்த போது கண்கள் கலங்கியதாகவும் , கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார்.

  • Share this:
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்பை, வரப்பிரசாதம் போல கருதுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். கடின உழைப்பே வெற்றிக்கு வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு, அளவு கடந்த மகிழ்ச்சியை தந்ததாகக் கூறினார். நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தனக்கு மிகுந்த பயனளித்ததாக கூறினார். இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களின் வழிகாட்டுதலும் தனக்கு உதவியதாக கூறினார்.

விராட் கோலி தன்னிடம் பந்தை அளித்த போது கண்கள் கலங்கியதாகவும் , கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார்.  புதியவன் என்று பாராமால் அனைத்து இந்திய வீரர்களும் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், மகளை காண்பதை விட நாட்டிற்கு ஆடுவதே மகிழ்ச்சியாக இருந்ததாகவும் நடராஜன் கூறினார். தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Published by:Vijay R
First published: