அஸ்வின் குறித்த மஞ்சுரேக்கர் கருத்தை மரியாதையுடன் மறுத்த அபினவ் முகுந்த்

ரவிச்சந்திரன் அஸ்வின்

அஸ்வினை ஆல் டைம் கிரேட் அதாவது அனைத்து கால சிறந்த வீரர்கள் பட்டியலில் சேர்க்க மாட்டேன் என்ற் சஞ்சய் மஞ்சுரேக்கர் தூசியைக் கிளப்பி விட அதிலிருந்து கண்களைக் கசக்கி விட்டப்படி பலரும் மஞ்சுரேக்கருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என அஸ்வினை கூற முடியாது என கூறியதற்காக முன்னாள் இந்திய அணி வீரர் மஞ்சரேக்கரை அந்நியன் பட மீம் ஒன்றினை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கவுண்டர் கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

    இ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ-வின் யூடியூப் தளத்தில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் மஞ்சரேக்கர், அஸ்வினை எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்காக சமூக வலைத்தளங்களில் மஞ்சரேக்கருக்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், இதுகுறித்த விவாதத்திற்கும் வழிவகுத்தது.

    தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்து மஞ்சரேக்கர் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் “ஆல்-டைம் கிரேட் ’என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு மற்றும் ஒப்புதல். டான் பிராட்மேன் கேரி சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எனது புத்தகத்தில் எல்லா நேரத்திலும் பெரிய வீரர்கள். உரிய மரியாதையுடன் இதனை தெரிவிக்கிறேன், அஸ்வின் இன்னும் எல்லா நேரத்திலும் சிறந்தவராக இல்லை. #AllTimeGreatExplained😉” என்று பதிவிட்டிருந்தார்.

    ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என்று 2019 உலகக்கோப்பையின் போது கருத்துக் கூறி எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில் சம்பந்தமில்லாமல் மஞ்சுரேக்கர் அஸ்வினை வம்புக்கிழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மற்றொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த், அஸ்வினுக்கு ஆதரவாக மஞ்சுரேக்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    அஸ்வின் ஆட்டத்தை நேசிக்கிறார். அவர் ஆராய்ச்சி செய்து பந்து வீசுகிறார். கிரிக்கெட் களத்தில் இறங்குவதற்கு முன்பாக தன்னை நன்றாகத் தயார் செய்து கொள்ளும் வீரர்களில் அஸ்வினும் ஒருவர். இது அவரது ஆட்டத்தில் வெளிப்படும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நன்றாகத் தயார் படுத்திக்கொள்வார் அஸ்வின். அஸ்வின் அபாரமான ஒரு பவுலர்.

    சஞ்சய் மஞ்சுரேக்கர் அஸ்வின் பற்றிய கூறிய கருத்தைப் படித்தேன், அவரது கருத்துடன் மரியாதையுடன் மாறுபடுகிறேன். அஸ்வின் ஒரு லெஜண்ட். ஏனெனில் அவர் பல உலகச் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார், என்றார் அபினவ் முகுந்த்.
    Published by:Muthukumar
    First published: