ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மீண்டும் இந்தியாவுக்கு ஆடுவேன் என்றீர்கள், செய்து விட்டீர்கள், தினேஷ் கார்த்திக் நீங்கள் ஒரு பெரிய ஆள்- ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

மீண்டும் இந்தியாவுக்கு ஆடுவேன் என்றீர்கள், செய்து விட்டீர்கள், தினேஷ் கார்த்திக் நீங்கள் ஒரு பெரிய ஆள்- ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஹர்திக் - தினேஷ்

ஹர்திக் - தினேஷ்

பிசிசிஐ.டிவிக்காக ஹர்திக் பாண்டியாவுடன் தினேஷ் கார்த்திக் நடத்திய உரையாடலில் முன்பு ஒருமுறை தினேஷ் கார்த்திக் தன்னிடம் உறுதி கூறியதை நினைவுகூர்ந்தார் ஹர்திக்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பே, தினேஷ் கார்த்திக் அந்த சீசனுக்கான தனது பெரிய நோக்கங்களை அறிவித்தார் - 2022 டி 20 உலகக் கோப்பை அணிக்கு இந்தியா திரும்பவும், ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் அணிக்கு உதவ வேண்டும் என்றார், இந்நிலையில் பிசிசிஐ.டிவிக்காக ஹர்திக் பாண்டியாவுடன் தினேஷ் கார்த்திக் நடத்திய உரையாடலில் முன்பு ஒருமுறை தினேஷ் கார்த்திக் தன்னிடம் உறுதி கூறியதை நினைவுகூர்ந்தார் ஹர்திக்.

  ஐபில் 2022 தொடரில் கடைசியில் இறங்கி ஆடும் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களில் 19 பவுண்டரி 19 சிக்சர்கள் அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 220. அதையே அப்படியே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அன்று 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசி மீண்டும் தன் டெத் ஓவர் ஹிட்டிங் திறமையை நிரூபித்தார்.

  இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே நடந்த உரையாடல் இதோ:

  "இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், உண்மையாகவே இதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பல இளம் வீரர்களுக்கு வாழ்க்கையில் நிறைய உத்வேகத்தை அளித்திருக்கிறீர்கள்.

  "நீங்கள் இந்திய அணியின் திட்டத்தில் இல்லாதபோது நீங்கள் பேசிய உரையாடல் எனக்கு நினைவிருக்கிறது, நிறைய பேர் உங்களை ஓரங்கட்டினர், முடிந்து விட்டீர்கள் என்றனர்.

  அந்த உரையாடல்கள் எனக்கு நினைவிருக்கிறது. மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவதே எனது இலக்கு என்றும், இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதே குறிக்கோள் என்றும், அதற்கு உங்களது அனைத்து முயற்சிகளையும் கொடுக்கப் போகிறேன் என்றும் கூறினீர்கள்.

  இன்று அதைச் சாதித்துள்ளீர்கள் உங்களின் சாதனை எங்களுக்கெல்லாம் உத்வேகத்தை அளிக்கிறது. நிறைய பேர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறார்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

  என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dinesh Karthik, Hardik Pandya, India vs South Africa, T20