இந்திய அணியை முன்னேற்றியது கங்குலிதான், தோனிதான் என்பதை என்னால் ஏற்க முடியாது, திராவிட்தான் - சுரேஷ் ரெய்னா நெத்தியடி

சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம்.

இந்திய அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்து அணியை முன்னேற்றியது யார் என்ற பேச்சு எழுந்தாலே உடனே தோனி, கங்குலி என்கிறார்கள், இந்த வாதத்தை நான் ஏற்க மாட்டேன், ஆனால் 3 வடிவங்களிலும் இந்திய அணியை பிரமாதமாக ஆடத் தயார் படுத்தியது ராகுல் திராவிட் தான் என்று சுரேஷ் ரெய்னா தன் சுயசரிதை நூலில் எழுதியுள்ளார்.

 • Share this:
  தோனி என்றால் உடனே ஒரு டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று ஒரு கூட்டம் கதறத் தொடங்கி விடும், எனவே அவர்தான் பிஸ்தா கேப்டன் என்று கூறத்தொடங்கிவிடும், அதே போல் ஒரு கூட்டம் 2001க்குப் பிறகு இந்திய அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றது தாதா கங்குலிதான் என்று கூறி மார்தட்டும். இந்த சொல்லாடலைத்தான் நாம் கேட்டு வந்திருக்கிறோம்.

  ஆனால் கிரெக் சாப்பல் பயிற்சியில் ராகுல் திராவிட் கேப்டன்சியில் ஆடிய சுரேஷ் ரெய்னா, தன் சுயசரிதை நூலில் திராவிட்தான் இந்திய அணியை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு சென்றது என்கிறார், அதுவும் 3 வடிவங்களிலுமே திராவிட்தான் என்கிறார் சுரேஷ் ரெய்னா.

  இங்கு இருக்கும் தோனி, கங்குலி லாபிக்கெதிராக இப்படிக் கூற ரெய்னாவுக்கு தைரியம் அதிகம்தான், ஆனால் மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் உண்மையைப் புட்டு வைத்துள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான். 17 ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டி தொடர்ச்சியாக வெற்றி பெற்றதும் ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான், இலக்கை விரட்டுவது எப்படி என்று கிரெக் சாப்பல் கற்றுக் கொடுத்தார் என்றும் வெற்றி பெறுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்ததே கிரெக் சாப்பல்தான் என்றும் இதே சுயசரிதையில் சுரேஷ் ரெய்னா தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தன் சுயசரிதையில் சுரேஷ் ரெய்னா, ராகுல் திராவிட் பற்றி கூறியது:

  ராகுல்பாய் எப்போதும் ஒரு குடும்பம் போல்தான் எங்களை நடத்துவார். ஜூனியர் வீரர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் ராகுல் திராவிட். இது போன்ற கூடுதல் முயற்சிகள் அவசியம் என்பதோடு எங்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். இளம் வீரர்கள்தான் திராவிடுக்கு எப்போதும் முக்கியம். திராவிடின் கீழ் முதிர்ச்சியடைந்தவர்கள் தான் பிற்பாடு இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார்கள். தோனி, இர்பான் பதான், நான், யுவ்ராஜ் சிங், பியூஷ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், முனாப் படேல், ஸ்ரீசாந்த் அனைவரும் ராகுல்பாயின் மேற்பார்வையில் வளர்ந்தவர்கள்.

  Also Read: England vs New Zealand: இங்கிலாந்து கதை 4ம் நாளில் முடிந்தது: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

  இந்திய கிரிக்கெட்டின் முகமாக நாங்கள் இருப்போம் என்பதை ராகுல் திராவிட் ஆழமாக நம்பினார். அதனால் நாங்கள் நன்றாக திறமையை வளர்த்துக் கொள்ள அவர் பாடுபட்டார்.

  பொதுவாக 10-15 ஆண்டுகளில் எழுச்சி பெற்ற இந்திய அணியைப் பற்றி பேசும்போது அதற்கான பெருமையை தோனிக்கோ, கங்குலிக்கோ சேர்ப்பதையே நாம் பார்த்திருக்கிறோம். அதாவது அணியை உருவாக்கி அதை முன்னேற்றிய வகையில் தோனி, கங்குலி என்பார்கள், இந்த வாதத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  இந்த அணியை தாதா உருவாக்கினார் என்று நான் கூற மாட்டேன். அவரும் தோனியும் கேப்டனாக தாக்கம் செலுத்தினர் அவ்வளவே. ஆனால் 3 வடிவங்களுக்கும் இந்திய அணியைத் தயார் செய்தது என்றால் அது ராகுல் திராவிட் தான் என்றே கூறுவேன்.

  இவ்வாறு கூறினார் ரெய்னா.
  Published by:Muthukumar
  First published: