ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸிவாவை கடத்தப்போகிறேன்... தோனிக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகை!

ஸிவாவை கடத்தப்போகிறேன்... தோனிக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகை!

தனது மகள் ஸிவாவுடன் தோனி.

தனது மகள் ஸிவாவுடன் தோனி.

I may just kidnap #Ziva, #PreityZinta Warns #MSDhoni | தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மொஹாலியில் கடந்த 5-ம் தேதி நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

CSK Team, IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

இந்த போட்டி முடிந்த பிறகு, பாலிவுட் நடிகையும், தோனியின் தீவிர ரசிகையுமான ப்ரீத்தீ ஜிந்தா, அவருடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதில், “கேப்டன் கூல் தோனிக்கு, நான் உட்பட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த முறை எனது அன்பு அவரது செல்ல மகள் ஸிவாவை நோக்கி மாறியுள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அவரிடம் நான் ஸிவாவைக் கடத்தலாம் என இருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள் என கூறினேன்” என்று ப்ரீத்தீ ஜிந்தா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தப் புகைப்படத்துக்கு நீங்கள் ஒரு தலைப்பு கொடுங்கள் என ப்ரீத்தீ ஜிந்தா கூறியுள்ளார். தற்போது, இந்தப் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.

மும்பை அணிக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!

#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Murugesan L
First published:

Tags: Chennai Super Kings, CSK, IPL 2019, MS Dhoni, Ziva Dhoni