• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹர்ஷல் படேல் தொடக்க வீரர், வெங்கடேஷ் அய்யர் பவுலிங்- ரோகித் சர்மா மகிழ்ச்சி

ஹர்ஷல் படேல் தொடக்க வீரர், வெங்கடேஷ் அய்யர் பவுலிங்- ரோகித் சர்மா மகிழ்ச்சி

ஆல்ரவுண்டர் ஹர்ஷல் படேல்.

ஆல்ரவுண்டர் ஹர்ஷல் படேல்.

  • Share this:
    பந்து வீச்சில் தன் ஸ்லோயர் ஒன் வீச்சு மூலம் உலகையே தன் பக்கம் பார்க்க வைக்கும் ஹர்ஷல் படேல் நேற்று பேட்டிங்கிலும் அட்டாக்கிங்காக ஆடி அசத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஆனால் ரோகித் சர்மா ஆச்சரியப்படவில்லை ஏனெனில் அவருக்குத் தெரிந்திருக்கிறது, ஹர்ஷல் படேல், ஹரியாணா டி20 அணியின் தொடக்க வீரர் என்பது.

    நேற்று 3வது டி20-யிலும் அசத்திய இந்திய அணி நியூசிலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றியதில் ஹர்ஷல் படேல் தன் பேட்டிங், பவுலிங் திறமையை நிரூபித்து தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை அறிவித்துக் கொண்டார். ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ரோகித் சர்மா கூறும்போது, இந்த தொடரோடு முடிந்துவிடாமல் அடுத்தடுத்து தொடர்ந்து முன்னேறுவது அவசியம். வெங்கடேஷ்அய்யருக்கு பந்துவீசும்திறமை இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

    “சிறப்பாக தொடங்கியிருப்பது முக்கியமானது, எல்லாமே மனநிலையைப் பொறுத்ததுதான். இந்த தொடர் வெற்றியுடன் தொடர்ந்து முன்னேறுவது முக்கியம். ஆடுகளத்தை ஒருமுறை பார்த்தவுடனே நாம் என்ன செய்ய வேண்டும் எனதெரி்ந்துவிடும். பனி விழும் முன்பே பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வந்தது.

    சிலவிஷயங்களை பேட்டிங்கில் திட்டமிட்டோம், ஆனால் நடக்கவி்ல்லை எனக் கூறவில்லை. நடுவரிசை பேட்டிங்கிலும் முன்னேற்றம் தேவை. ஆனால், கடந்த 2 போட்டிகளாக அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

    சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக அஸ்வின், அக்ஸர் படேல் அருமே, சஹல் திரும்பிவந்துள்ளார். வெங்கடேஷுக்கு பந்துவீசும் திறமை இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி வரிசை வரை பேட்டர்களை வைத்திருப்பதை விரும்புகிறேன்.

    ஹர்சல் படேல் 8-வது வீரராக வந்தாலும்பேட் செய்கிறார். ஹரியானா அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக இறங்குபவர் ஹரஷல் படேல். தீபக் சாகர்ர் பேட்டிங்கை இலங்கை தொடரில் பார்த்தோம், அவரும் சிறப்பாக ஆடினார். யஜுவேந்திர செகல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.”

    இவ்வாறு ரோகித் த் சர்மா தெரிவித்தார். கான்பூரில் முதல் டெஸ்ட் நடைபெறுகிறது அதற்கு ரகானே கேப்டன். விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டிக்குத் திரும்புகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: