Home /News /sports /

Virat Kohli: எனக்கு நானே தலைவன் - விராட் கோலி ஓபன் டாக்

Virat Kohli: எனக்கு நானே தலைவன் - விராட் கோலி ஓபன் டாக்

Virat kohli

Virat kohli

"நான் ஒரு வீரராக இருந்தபோதும் எப்போதும் ஒரு கேப்டனைப் போலவே நினைத்தேன். அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நானே எனக்குத் தலைவன் தான்.” - விராட் கோலி

  மகேந்திர சிங் தோனியை உதாரணமாகக் காட்டி, ஒருவர் தலைவராக இருக்க ஒரு அணியின் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இப்போது அவர் இந்திய கேப்டனாக இல்லாததால், அணியின் பேட்டிங்கில் முக்கியத் தூணாக அவர் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்றும் விராட் கோலி கூறுகிறார்.

  விராட் கோலி கேப்டன்சி விவகாரம் ஒரு புரியாத புதிராகவும் மீண்டும் பிசிசிஐ-யின் ரகசியக் காப்புப் பிரமாணம் எனும் அடியாழத்துக்குள் புதைந்து போன விஷயமாகி விட்டது. வடிவேலு ஒரு படத்தில் ‘எதுக்குடா நான் சரியா வரமாட்டேன்’னு கேட்டு கிட்டத்தட்ட அழுதேவிடுவார், அதே போல்தான் இப்போது கோலி ரசிகர்கள், அவர் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டார்னு கேட்டு அழும் நிலைமைக்கு வந்து விட்டனர். ஆனால் ஒருநாளும் விராட் கோலி ஏன் கேப்டன்சியிலிருந்து விலகினார் என்பதோ, விராட் கோலி ஏன் கும்ப்ளேவை பயிற்சியாளராக ஏற்காமல் வெளியேற்றினார் என்பதோ உலகிற்கு ஒரு போதும் தெரியாத ரகசியமாகவேத்தான் போகும். உச்ச நீதிமன்றம் கடும் கட்டளைப் போட்டும் ஒருநாளும் வெளிப்படைத்தன்மைக்கு மாற மாட்டோம் என்று என்று செயல்படும் வாரியங்களில் இதுவும் ஒன்று.

  யேல் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் சுஷாந்த் சிங் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ‘இந்திய அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பிசிசிஐ-யின் செயல்பாடுகளை கவனித்தால் போதும்’ (“Beyond the BCCI”) என்று கூறியிருப்பது மிகப்பிரமாதமான ஒரு அகக்காட்சியாகும்.

  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி கூறியதாவது:

  "எல்லாவற்றிற்கும் ஒரு பதவிக்காலமும் காலவரம்பும் உள்ளது. நீங்கள் அதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 'இவர் என்ன செய்தார்' என்று மக்கள் கூறலாம், ஆனால் நீங்கள் முன்னேறிச் சென்று மேலும் சாதிக்க நினைக்கும் போது, ​​உங்கள் வேலையைச் செய்துவிட்டதாக உணர்கிறீர்கள்.

  இப்போது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அணிக்கு பங்களிக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கலாம். நீங்கள் அணியை மேலும் வெற்றிபெறச் செய்யலாம். அதனால் பெருமைப்படுங்கள். தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

  "எம்எஸ் தோனி அணியில் இருந்தபோது அவர் ஒரு தலைவராக இல்லை. அவரிடமிருந்து ஆலோசனைகளை நாங்கள் பெறும் நபராகவே இருந்தார், அதாவது தலைவராக இல்லாவிட்டாலும் தலைவராகத்தான் இருந்தார். அவருக்கும் இது இயற்கையான முன்னேற்றமே என்றே தோன்றியிருக்கும். இந்திய அணியை முன்னேற்றிச் செல்வதில் நான் ஓரளவு வெற்றி அடைந்துள்ளேன், ஆனால் அதைச் சாதிக்கும் போது எந்த ஒரு பொருளாதார இலட்சியமும் இல்லாமல்தான் செய்தேன். இது தான் நீண்டகாலம் தடம்பதிக்கும்.

  கேப்டனிலிருந்து நகர்ந்து செல்வது என்பது அதைச் செய்வதற்கான சரியான நேரத்தைப் புரிந்துகொள்வதற்கான தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாகும். இதுதான் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேறு ஒரு கோணம் வேண்டும். வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் ஒரே கலாச்சாரம்தான் ஆனால் வெவ்வேறு விதத்தில் வீரர்களை உயர்த்துவதற்கும் வித்தியாசமான முறையில் பங்களிப்பதற்கும் செயல்பட வேண்டும்.

  ஒருவர் எல்லா வகையான பாத்திரங்களையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் ஒரு வீரராக எம்.எஸ். தோனிக்கு கீழ் விளையாடினேன், நீண்ட காலமாக அணியின் கேப்டனாக இருந்தேன், என் மனநிலை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

  "நான் ஒரு வீரராக இருந்தபோதும் எப்போதும் ஒரு கேப்டனைப் போலவே நினைத்தேன். அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நானே எனக்குத் தலைவன் தான்.” என்றார் விராட் கோலி.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Virat Kohli

  அடுத்த செய்தி