• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 WC| அசிங்கமா பேசிப்புடுவேன் ஆம்புரோஸ், மரியாதை கெட்டுடும்- பொங்கி எழுந்த கெய்ல்

T20 WC| அசிங்கமா பேசிப்புடுவேன் ஆம்புரோஸ், மரியாதை கெட்டுடும்- பொங்கி எழுந்த கெய்ல்

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

மே.இ.தீவுகளின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சு வரிசையில் கர்ட்லி ஆம்புரோசுக்கு முதன்மையான இடம் உண்டு, கிறிஸ் கெய்லுக்கு அதே போல் பேட்டிங்கில் இடமுண்டு, ஆனால் இரண்டு லெஜண்ட்கள் சண்டைப் போட்டுக்கொண்டால் அது கிரிக்கெட்டுக்கும் அவர்கள் மீதான மரியாதைக்கும் எவ்வளவு பெரிய கேடு, ஆனால் அதையெல்லாம் மீறி இருவருக்கும் வார்த்தைப் போர் முற்றி விட்டது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சமீபத்தில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ், “என்னைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணிக்கு இயல்பான தேர்வு கெய்ல் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்நாட்டுத் தொடரில் கெய்ல் என்ன விளையாடினார்?

    பெயரளவுக்கு விளையாடி ரன்கள் சேர்த்தார். இதற்கு முன் நான் என்ன சொல்லியிருந்தேன், உள்நாட்டுத் தொடரில் கெயில் சரியாக விளையாடாவிட்டால் அவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று தெரிவித்தேன். இப்போது அணியில் கெயில் இடம் பெற்றுள்ளார். என்னைப் பொறுத்தவரை கெயில் தேர்வு கண்டிக்கத்தக்கது, அது எப்படி அவர் தன்னை நிரூபிக்காமல் தானாகவே தேர்வாகி விட முடியுமா? கெயில் ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கடந்த 18 மாதங்களாக கெயில் சரியாகவே விளையாடவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

    ஆம்ப்ரோஸின் இந்தக் கருத்து கிறிஸ் கெய்லின் தவறான பக்கத்தை உரச பொங்கி எழுந்தார் கிறிஸ் கெய்ல், “ஆம்புரோஸுக்குத் தனிப்பட்ட முறையில் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும், எனக்கும் இடையிலான பேச்சு முடிந்துவிட்டது. இதற்கு மேல் உங்களுக்கு மரியாதையில்லை. என்னைப் பற்றிப் பேசாதீர்கள், யுனிவர்ஸ் பாஸுக்கு இனிமேல் ஆம்புரோஸ் மீது மரியாதை இல்லை.

    நான் ஆம்புரோஸ் பற்றிப் பேசுகிறேன். அவர் மீது அதிகமான மரியாதை வைத்திருந்தேன். ஆனால், இப்போது என் ஆழ்மனதிலிருந்து பேசுகிறேன். ஆம்புரோஸ் ஓய்வு பெற்றதிலிருந்து எனக்கு எதிராக நடக்கிறார். என்னைப் பற்றி ஊடகங்களிடம் எதிர்மறையான கருத்துகளைக் கூறி தன் மீதான கவனத்தை அதிகரிக்கிறார் ஆம்புரோஸ். அவருக்குத் தேவைப்பட்டால் நானும் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்க்க முடியும்.

    மே.இ.தீவுகள் அணிக்கு எதிர்மறையான கருத்துகளை உலகக் கோப்பை தொடங்கும் முன் பேசுவதை ஆம்புரோஸ் நிறுத்த வேண்டும். இது நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கிறது. முன்னாள் வீரர்கள் தங்கள் நாட்டு வீரர்களை ஆதரிக்கிறார்கள். ஏன் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் ஆம்புரோஸ் தனது சொந்த அணியைக் கூட ஆதரிக்க மறுக்கிறார்.

    இதற்கு முன் இரு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். 3-வது கோப்பைக்காக நகர்கிறோம். என்ன நடக்கிறது என்பதை அணி வீரர்கள் பார்க்கிறார்கள். இது நிச்சயம் அணியில் பிரதிபலிக்கும். முன்னாள் வீரர்கள் தொடர்ந்து எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருந்தால், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் அவமரியாதையாகப் பேச வேண்டியதிருக்கும், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் ஆம்புரோஸை வசைபாட வேண்டியதிருக்கும். ஆதலால், ஆம்புரோஸ் மே.இ.தீவுகள் அணியை உற்சாகப்படுத்துங்கள். ஆதரவு தாருங்கள்'' என்றார் ஆம்புரோஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: