Home /News /sports /

நான் என் வாழ்நாளில் அப்படி கத்தியதில்லை, தோனி செய்த காரியம் அப்படி- ரவி சாஸ்திரி கூறும் சம்பவம்

நான் என் வாழ்நாளில் அப்படி கத்தியதில்லை, தோனி செய்த காரியம் அப்படி- ரவி சாஸ்திரி கூறும் சம்பவம்

சாஸ்திரி-தோனி

சாஸ்திரி-தோனி

தோனிக்கு கால்பந்து என்றால் உயிர். அவர் கால்பந்தாட்டப்பிரியர், அடிக்கடி கால்பந்து ஆடுவார். அப்படி ஒருமுறை அவர் தீவிரமாக கால்பந்து ஆடிய தருணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி அவரைப் பார்த்த்து தான் சத்தம் போட்ட தருணத்தை பகிர்ந்து கொண்டார்

மேலும் படிக்கவும் ...

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடப்பு சீசனில் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனியின் கால்பந்து மீதான காதல் மற்றும் அவரைத் தடுக்க ஒரு சந்தர்ப்பத்தில் அவரை தான் எப்படி கத்தினார் என்பதையும் குறித்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் தோனி கால்பந்து ஆடுகிறேன் என்று வழுக்கி விழுந்து காயமடைந்து விட்டால் என்ன ஆவது? இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தோனி ஆடமுடியாமல் போனால் என்ன ஆகும்? ரசிகர்கள் அதை எப்படி புரிந்து கொள்வார்கள் என்று சாஸ்திரி வெலவெலத்துப் போயிருக்கிறார், அதனால் கால்பந்து ஆடிய தோனியை நோக்கி சாஸ்திரி கத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரவி சாஸ்திரி இது தொடர்பாக கூறியபோது, “அவர் கால்பந்தை பயங்கரமாக நேசிக்கிறார். இதுதான் நம்மை பயமுறுத்தும் விஷயம். ஏனெனில் அவர் விளையாடும் தீவிரம், அவர் காயமடைய மாட்டார் என்பதற்கனா உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு பனி இருந்தது, டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அவர் சறுக்கிச் சென்றார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

    என் வாழ்நாளில் நான் அப்படிக் கத்தியதில்லை, விளையாட்டை நிறுத்து என்றேன்! அந்த மாதிரி ஏதாவது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உங்கள் முக்கிய வீரரை நீங்கள் இழக்க முடியாது ஏனென்றால் டாஸ் போட இன்னும் 5 நிமிடங்கள்தான் இருந்தன.” என்று ரவிசாஸ்திரி இப்போது பகிர்ந்து கொண்டார்.

    நேற்று 4 போட்டிகள் தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே ஆர்சிபி அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இணைந்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dhoni, IPL 2022, Ravi Shastri

    அடுத்த செய்தி