அஸ்வின் என் மீது ஆதிக்கம் செலுத்த எப்படி விட்டேன்?- ஸ்மித் வேதனை

அஸ்வின் என் மீது ஆதிக்கம் செலுத்த எப்படி விட்டேன்?- ஸ்மித் வேதனை

ஸ்மித், அஸ்வின்.

நான் அவரை என்னை ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன். இதை நான் எந்த ஸ்பின்னருக்கும் என் கரியரில் இதுவரை அனுமதித்ததில்லை.

 • Share this:
  நடைபெற்று வரும் இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரன் மெஷின் என்று கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 0, 1 நாட் அவுட், 0, 8 என்று சொதப்பி பயங்கரத்தைச் சந்தித்து வருகிறார்.

  இவரது பேட்டிங் சொதப்பலால் ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் மூழ்கி வருகிறது. பேட்டிங் தேறும் வழியாகத் தெரியவில்லை. இந்தியப் பந்து வீச்சும் துல்லியத்தின் உச்சத்தில் உள்ளது. அஸ்வின் ஆஸ்திரேலியப் பிட்ச்களில் வீசும் லெந்த், பிளைட் ,  கோணம் ஆகியவற்றை சரியாகக் கையகப்படுத்தி விட்டார்.

  அவரது வாழ்நாளில் ஸ்மித் இப்படிப்பட்ட சொதப்பலை சந்தித்ததில்லை.

  சென் ரேடியோவில் தன் பேட்டிங் தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

  “இப்போதைக்கு களத்தில் சிறிது நேரம் செலவிடுவதை எதிர்நோக்குகிறேன். அதுதான் எனக்கு முக்கியமானது, இந்த ஆண்டில் நான் 64 பந்துகள் ஆடியதுதான் அதிக நேரம் நான் ஆடியதாகும் இதுவும் ஒருநாள் போட்டிகளில்.

  எனக்கு அதுவும் முக்கியம், ஒருநாள் போட்டிகளில் களத்தில் நல்ல துடிப்புடன் இருந்தேன். வலைப்பயிற்சியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடலாம் ஆனால் நிஜமானப் போட்டியை அது பிரதிபலிக்காது. அதனால்தான் கிரீசில் நேரத்தைக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்கிறேன், அதைத்தான் நான் எதிர்நோக்குகிறேன்.

  ஆனால் அது மிகக்கடினம்தான் ஏனெனில் நல்ல பவுலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக கிரீசில் நாம் சவுகரியமாக ஆட முடியாது.

  நான் எனக்குப் பிடித்த வகையில் அஸ்வினை ஆடவில்லை. நான் அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நான் அவரை என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன். இதை நான் எந்த ஸ்பின்னருக்கும் என் கரியரில் இதுவரை அனுமதித்ததில்லை.

  நான் இந்தியப் பந்து வீச்சை எதிர்த்து தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்க வேண்டும். அப்படியாடியிருந்தால் அவர்கள் பவுலிங் உத்தியை மாற்றியிருப்பார்கள். நான் அதிக நேரம் ஆட வேண்டும் என்று நினைத்ததால் ஆக்ரோஷம் காட்ட முடியவில்லை. ஒரு விதத்தில் இருபுறமும் கூர்தீட்டிய வாள்தான் என் முன்னால் உள்ளது. ஆனால் என் மீது நான் நம்பிக்கை வைத்து என் ஆட்டத்தை நான் ஆட வேண்டும்” என்று கூறினார் ஸ்மித்.
  Published by:Muthukumar
  First published: