ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான்.

I have 5 different leg-spin variations: #SunrisersHyderabad bowler #Rashid#Khan | பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நட்சத்திர வீரர் ரஷித் கான், தனக்கு மொத்தம் 5 விதமான ஸ்பின் தெரியும் என கூறியுள்ளது ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

Rashid Khan Batting
பந்தை சிக்சருக்கு பறக்கவிடும் ரஷித் கான்.

ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய ரஷித் கான், “பந்துவீச்சை தவிர பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு டாம் மூடி, முத்தைய முரளிதரன், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகிய பயிற்சியாளர்கள் உதவியாக உள்ள்ளனர்.

அணிக்கு தேவைப்படும்போது பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவேன். எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும். அதனால், மாற்றி மாற்றி பந்துவீசுவேன்” என்று கூறினார்.

முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

Also Watch...

First published:

Tags: IPL 2019, Rashid Khan