Home » News » Sports » CRICKET I GOT OUT TO A BALL THAT DID NOT SPIN AT ALL STEVE SMITH EXPLAINS ASHWIN BALL MUT

ஸ்பின் ஆகாத அஸ்வின் பந்தை ‘எட்ஜ்’ செய்து ஆட்டமிழந்தேன்: ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிங்க் நிறப்பந்தில் அஸ்வினிடம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டையின் விளிம்பில் பட்டு ரஹானேவிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஸ்பின் ஆகாத அஸ்வின் பந்தை ‘எட்ஜ்’ செய்து ஆட்டமிழந்தேன்: ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்
அஸ்வின்,ஸ்டீவ் ஸ்மித்
  • Share this:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிங்க் நிறப்பந்தில் அஸ்வினிடம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டையின் விளிம்பில் பட்டு ரஹானேவிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்த்துவது மிகமிகக் கடினம். ஆனால் அதனை அஸ்வின் மிகச் சாதுரியமாகவும் புத்தி கூர்மையுடன் செய்து காட்டினார்.

ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசி பந்தை மிடில் அண்ட் லெக்கில் பிட்ச் செய்தார், பந்து ஆஃப் ஸ்பின் ஆகி லெக் ஸ்டம்புக்கு வெளியே போகுமாறு வரும் பிளிக் ஆடிவிடலாம் என்ற நிலைக்கு ஸ்மித் தயாராக இருந்தார். ஆனால் அந்தப் பந்து அஸ்வின் திருப்பவில்லை, மாறாக ஆர்ம் பால் போன்று வீச அது நேராகச் சென்று சற்று கூடுதல் பவுன்ஸ் ஆனது.


கடக்கும் வழியில் ஸ்மித் மட்டை விளிம்பில் பட்டுச் சென்றது. ரஹானே கேட்சை அள்ளினார். இது பிரமாதமான பந்து என்று பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

29 பந்துகள் ஆடி இறுக்கமான இந்தியப் பந்து வீச்சில் 1 ரன் எடுத்திருந்த ஸ்மித் இப்படி ஆட்டமிழந்தது அவருக்கே ஆச்சரியகரமான ஒன்றாகவே இருக்க வேண்டும்.

இது தொடர்பாக ஸ்மித்திடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்புகையில் இந்திய வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் அதிக கவனமேற்கொண்டதால் அஸ்வினிடம் ஆட்டமிழந்தாரா என்று கேட்டது, அதற்கு ஸ்மித், “இல்லை! ஸ்பின் ஆகாத அந்தப் பந்தை எட்ஜ் செய்தேன்.துரதிர்ஷ்டவசமாக சில வேளைகளில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. ஆனால் அந்தப் பந்தை பிரமாதமாக வீசினார் அஸ்வின், இதுதான் உண்மை. இந்தப் பந்துக்கு முந்தைய இரண்டு பந்துகள் பிட்ச் ஆகி நின்று திரும்பின.

இந்தப் பந்து அதே லெந்தில் பிட்ச் ஆகி நேராக வந்தது. நான் அதை எனக்கு பிடித்தமான விதத்தில் ஆடவில்லை. அது ஒரு நல்ல பந்து வீச்சு.

இந்தியாவில் ஆவது போல் இங்கு பந்துகள் ஸ்பின் அவ்வளவாக ஆகாது. ஆனால் பவுன்ஸ் இருக்கும். அஸ்வின் இப்போது அனுபவஸ்தர் ஆகி விட்டார். உலகத்தரம் வாய்ந்த பவுலராக அவர் இருக்கிறார். நானும் அந்தப் பந்திலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் இதை விட சிறப்பாக அவரை எதிர்கொள்வேன்” என்றார்.
First published: December 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories