மனதிருப்திக்காகவே கிரிக்கெட் விளையாடுகிறேன்! முரளி விஜய் உருக்கம்

Vijay R | news18-tamil
Updated: August 31, 2019, 7:36 PM IST
மனதிருப்திக்காகவே கிரிக்கெட் விளையாடுகிறேன்! முரளி விஜய் உருக்கம்
முரளி விஜய்
Vijay R | news18-tamil
Updated: August 31, 2019, 7:36 PM IST
சுய ஆர்வம், மனதிருப்திக்காகத் தான் கிரிக்கெட் விளையாடுகிறேன். எந்த அணியாக இருந்தாலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என முரளி விஜய் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 17 ஒரு நாள் போட்டிகளிலும், 61 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரராக முரளி விஜய் உள்ளார்.

“எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். சுயஆர்வம் மற்றும் பெருமைக்காகத் தான் கிரிக்கெட் விளையாடுகிறேன். மிகப்பெரிய பங்களிப்பை எனது போட்டிகளில் கொடுத்து வருகிறேன். எந்த அணியாக இருந்தாலும் எனது பங்களிப்பை சிறப்பாக கொடுப்பேன்.


என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் விளையாட்டில் இதை தான் செய்தேன். இதனால் மாற்றமும் நிகழாது என்பது தெரியும். ஆனால் வாய்ப்பு தான் ஒரு சிறந்த அனுபவத்தை தரும், அதுபோன்ற ஒன்றை தான் எதிர்பார்க்கிறேன்“ என முரளி விஜய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

35 வயதாகும் முரளி விஜய் இந்திய அணிக்காக கடந்த வருடம் டிசம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை.

Also Watch

Loading...

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...