Home /News /sports /

அன்று பாண்டியா சிங்கிள் எடுக்க மறுத்தார், நேற்று தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னால் அக்சர் படேலை இறக்கினார் ரிஷப் பண்ட்- லெஜண்ட்கள் சாடல்

அன்று பாண்டியா சிங்கிள் எடுக்க மறுத்தார், நேற்று தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னால் அக்சர் படேலை இறக்கினார் ரிஷப் பண்ட்- லெஜண்ட்கள் சாடல்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடியுள்ளனர்.

    அன்று ஹர்திக் பாண்டியா தான் ஏதோ தினேஷ் கார்த்திக்கை விடவும் பன்மடங்கு பெரிய ஹிட்டர் போலவும், தினேஷ்கார்த்திக் ஏதோ பேட்டின் தெரியாதவர் போலும் சிங்கிள் எடுக்க மறுத்து அவரை அவமானப்படுத்தினார் என்றால் நேற்று அக்சர் படேலை முன்னால் இறக்கி ரிஷப் பண்ட் இன்னொரு அவமானத்தை தினேஷ் கார்த்திக்கிற்கு ஏற்படுத்தினார்.

    13 ஓவர்கள் முடிந்து இந்தியா மிடில் ஆர்டரை இழந்து தவித்து வரும்போது, அதுவும் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் ஷ்ரேயாஸ் அய்யர் போன்றவர்களே திணறும்போது தினேஷ் கார்த்திக்கை இறக்காமல் அக்சர்படேலை இறக்கியது லெஜண்ட்கள் மத்தியில் கடும் வசையைத் தூண்டியுள்ளது.

    சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்சில் கூறும்போது, “சில வேளைகளில் ஒருவரை பினிஷர் என்று முத்திரை குத்துவது இதில்தான் போய் முடியும், பினிஷர் என்றால் 15 ஓவர்களுக்குப் பிறகுதான் இறங்க வேண்டுமா என்ன? அவர் 12-13வது ஓவரில் இறங்கினால் என்ன? இந்த மாதிரி ஒரு சிந்தனைப் போக்கை ஐபிஎல் தொடரிலும் பார்த்தோம்.

    பினிஷர் என்றால் சிக்சர் அடிப்பவர்கள் அதனால் ஒன்று இரண்டு என்று எடுத்து செட்டில் ஆகத்தெரியாதவர்களா என்ன? இன்னும் சொல்லப்போனால் தினேஷ் கார்த்திக் போன்றோரை 12-13வது ஓவரில் இறக்கி விட்டால் இன்னும் செட்டில் ஆகி பிறகு சிக்சர்களை அடிக்க ஏதுவாக இருக்கும்” என்றார் தினேஷ் கார்த்திக்.

    தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியைச் சாடும்போது, “கார்த்திக் ஒரு அனுபவ வீரர், அவர் இருக்கும் போது, அதுவும் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளில் ஆடியுள்ளார் என்பதையல்லவா பார்க்க வேண்டும். ஐபிஎல்-ஐ விட்டுத்தள்ளுங்கள். இப்படியிருக்கும் போது எப்படி அக்சர் படேலை அவருக்கு முன்னால் இறக்க முடியும்? இது உண்மையில் அதிர்ச்சிகரமான முடிவுதான்” என்றார்.

    அவர் அக்சர் படேலுக்கு முன்பு வந்திருக்க வேண்டும்.ஒருவேளை அப்படி முன்பாக அனுப்பியிருந்தால் 148 என்ற ஸ்கோர் 160 ஆகக்கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது, கத்துக்குட்டி ரிஷப் பண்ட் என்று லெஜண்ட்கள் சாடுகின்றனர்.

    கவுதம் கம்பீர் கூறும்போது, “ஹர்திக் பாண்டியா அவுட் ஆனவுடனேயே தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டிருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கை கடைசி 2-3 ஓவர்களுக்கான வீரராக மட்டுமே சிந்திக்கக் கூடாது. தினேஷ் கார்த்திக் ஒரு ஸ்பெஷலிஸ்ட். அவர் முன்னால் இறங்கி இன்னும் பிட்சின் போக்கை பந்து வீச்சைக் கணித்திருந்தால் கடைசி 2-3 ஓவர்களில் இன்னும் அதிகமாக ரன்களைக் குவித்திருப்பார்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, T20

    அடுத்த செய்தி