Home /News /sports /

நாட்டுக்காக ஆடுங்கள் என்று நான் போய் பிச்சையா எடுக்க முடியும்: ஃபில் சிம்மன்ஸ் வேதனை

நாட்டுக்காக ஆடுங்கள் என்று நான் போய் பிச்சையா எடுக்க முடியும்: ஃபில் சிம்மன்ஸ் வேதனை

பில் சிம்மன்ஸ்

பில் சிம்மன்ஸ்

ஐபிஎல் போன்ற தனியார் தொடர்களில் பிரபலங்களாகவும் ஹை புரொபைல் வீரர்களாகவும் திகழும் மேற்கிந்திய தீவுகளின் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன் போன்றோர் ஏன் மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20களில் இடம்பெறுவதில்லை என்பது எல்லோரையும் உறுத்தும் ஒரு கேள்வியே.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஐபிஎல் போன்ற தனியார் தொடர்களில் பிரபலங்களாகவும் ஹை புரொபைல் வீரர்களாகவும் திகழும் மேற்கிந்திய தீவுகளின் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன் போன்றோர் ஏன் மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20களில் இடம்பெறுவதில்லை என்பது எல்லோரையும் உறுத்தும் ஒரு கேள்வியே.

    இந்தியாவுக்கு எதிராகவும் ஆடவில்லை, இப்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் ஆடவில்லை, ஆனால் தி ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸில் ஆடுகிறார் ஆந்த்ரே ரஸல்.தனியார் கிரிக்கெட்டுகள் சர்வதேச கிரிக்கெட்டையே அழித்து வருகிறது. இந்தத் தனியார் கிரிக்கெட்டுகளை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்மட்ட நாடுகளின் அணிகள் அழிவதில்லை மாறாக இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உட்பட தேசிய கிரிக்கெட் பெரிய அளவில் தடைகண்டு வருகிறது. அன்று ட்ரெண்ட் போல்ட் இனி நியூசிலாந்துக்கு ஆடுவதில் காசு பணம் கிடையாது என்று முடிவெத்து விட்டார். ஏதோ ஃபாக்டரியில் வேலைப்பார்க்கும் அடிமட்ட கூலி தொழிலாளி போல் ‘எனக்கு 3 குழந்தைகள், குடும்பம் இருக்கிறது நான் வேறு வழி பார்க்க வேண்டாமா’ என்ற தொனியில் சென்று விட்டார்.

    இந்நிலையில் மே.இ.தீவுகளின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், “இது மிகவும் புண்படுத்துகிறது. இதை வேறு வகையில் எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லை. நாட்டுக்காக ஆடுங்கள் என்று நான் போய் வீரர்களிடம் மண்டியிட வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு ஆட வேண்டும் என்றால் அவர்கள்தான் அணி நிர்வாகத்துக்கு நான் இருக்கிறேன் என்று அறிவிக்க வேண்டும்.

    2021 உலகக்கோப்பைக்குப் பிறகு ரஸல் மேற்கிந்திய அணிக்கு ஆடவில்லை. யுஏஇ புதிய லீக் அணியில் இருக்கிறார் ரஸல். சுனில் நரைனும் தி ஹண்ட்ரட் தொடரில் இருக்கிறார். சுனில் நரைன் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2019ம் ஆண்டு ஆடியதுதான்.

    எவின் லூயிஸ், ஒஷேன் தாமஸ் பிட்னெஸ் டெஸ்ட்டுக்கே ஆஜராகவில்லை, ஆனால் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜேசன் ஹோல்டர், ஆபெட் மெக்காய், அல்ஜாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் ரெகுலராக ஆடிவந்தாலும், இப்போது தென் ஆப்பிரிக்கா சூப்பர் லீக் டி20-யில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று வீரர்களிடம் போய் நான் பிச்சை எடுக்க வேண்டுமா என்ன என்று பயிற்சியாளர் சிம்மன்ஸ் கேட்டதற்கு ஆந்த்ரே ரசல், “இப்படிப் பேச்சுவரும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அமைதிதான் காப்பேன்” என்று தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: T20, West indies

    அடுத்த செய்தி