Home /News /sports /

Saha: விருத்திமான் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர்- ட்வீட்டைப் பகிர்ந்து சஹா வேதனை

Saha: விருத்திமான் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர்- ட்வீட்டைப் பகிர்ந்து சஹா வேதனை

விருத்திமான் சகா

விருத்திமான் சகா

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் உடனடி பேட்டியைக் கேட்டுள்ளார் ஒரு பத்திரிகையாளர், சஹா மறுக்கவே அவரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் உடனடி பேட்டியைக் கேட்டுள்ளார் ஒரு பத்திரிகையாளர், சஹா மறுக்கவே அவரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விருத்திமான் சாஹா நீக்கப்பட்டுள்ளார், மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட அணி நிர்வாகம் தன்னை ஓய்வு பெறச் சொன்னதாக அவர் பரபரப்பு பேட்டியளித்ததோடு தற்போது தன்னை மிரட்டிய பத்திரிகையாளரையும் அம்பலப்படுத்தியுள்ளார் சஹா.

    இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் விருத்திமான் சாஹாவை பேட்டி கொடுக்குமாறு வற்புறுத்திய பத்திரிகையாளரின் மிரட்டல் அரட்டையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார் சஹா. ஒரு நேர்காணலைச் செய்வது தொடர்பாக "யார் உதவ முடியுமோ அவர்களைத் தேர்வுசெய்யுங்கள்" என்று பத்திரிகையாளர் சாஹாவைக் குறிப்பிட்டார் - இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து சாஹா நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஸ்கிரீன் ஷாட் வெளியிடப்பட்டது.



    பத்திரிகையாளர் தன்னை மிரட்டியது தொடர்பாக விருத்திமான் சஹா ட்விட்டரில், “இந்திய கிரிக்கெட்டுக்கு எனது பங்களிப்புகள் அனைத்திற்கும் பிறகு.. "மதிப்பிற்குரிய" பத்திரிக்கையாளரிடம் இருந்து நான் எதிர்கொள்வது இதுதான்! இதழியல் எங்கே போய்விட்டது,” என்று சாஹா சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    Also Read: என்னை ரிட்டையர் ஆகு என்றார் திராவிட், வாக்குறுதியை கங்குலி காப்பாற்றவில்லை- சஹா வேதனை பேட்டி

    சஹாவை நீக்கீயது தொடர்பாக இந்திய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது, “வயது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எந்த அடிப்படையில் சஹா நீக்கப்பட்டார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க முடியாது. ஆனால் நீங்கள் நீண்ட காலம் விளையாடாதபோது இளைஞர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் காலம் வரும். மேலும், சஹா ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை என்று தெரியவில்லை. அது எனது அதிகார வரம்பு அல்ல, அதை மாநிலப் பிரிவுதான் கவனிக்க வேண்டும்.” என்றே கூறுகிறார் சேத்தன் சர்மா. பிசிசிஐ-க்கு கொஞ்சமாவது வெளிப்படைத்தன்மையை யாராவது புகட்டினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Journalist, Wriddhiman Saha

    அடுத்த செய்தி