'2023 உலகக்கோப்பையில் விளையாடுவேன்' தடை முடியும் நிலையில் ஸ்ரீசாந்த் நம்பிக்கை

"2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவேன்"

ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடும் கேரள அணிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

 • Share this:
  2023-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக தன்னால் விளையாட முடியும் என வேகப்பந்து வீச்சாளார் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  2013-ம் ஆண்டு ஐபிஎல் மேட்ச் பிக்சிங் புகாரில் குற்றம் நிரூபணமானதால் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை வரும் செப்டம்பருடன் முடிகிறது. அதனைத் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடும் கேரள அணிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தனக்கு 40 வயதாகும் என்றபோதும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். தடைக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை எதிரிக்கும் வரக் கூடாது என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: