தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகரிடம், தோனியின் பெயருக்கு மேலே தன்னால் ஆட்டோகிராப் போட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி இருப்பவர் இஷான் கிஷன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் ஜொலிக்கும் இஷான், வருங்காலத்தில் இந்திய அணிக்காக பல முக்கிய ஆட்டங்களில் வெற்றியைத் தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது.
24 வயதாகும் இந்த இளம் வீரர், வங்கதேச அணிக்கு எதிராக நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 210 ரன்களை மிக எளிதாக கடந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். 35 ஆவது ஓவரிலேயே இஷான் கிஷன் இந்த ரன்னை கடந்திருப்பதுதான் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகும்.
பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் அடித்த இங்கிலாந்து… 3ஆவது டெஸ்டிலும் வெற்றி…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக இவர் விளையாடி வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் இஷன் கிஷன் இடம்பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் வாங்கி வந்துள்ளார். அந்த ரசிகரின் போனின் பின்பக்கம், தோனி ஏற்கனவே ஆட்டோகிராப் போட்டிருக்கிறார். இஷானிடம் போனை கொடுத்த அந்த ரசிகர், தோனியின் ஆட்டோகிராப் மேலே இடம் இருப்பதை சுட்டிக்காட்டி, அங்கு ஆட்டோகிராஃப் போடுமாறு கேட்டுக்கொண்டார்.
மெஸ்ஸி இந்தியாவில் பிறந்து இருந்தால் உலகக் கோப்பை வென்ற பின் இதான் நடந்திருக்கும் - சேவாக்
அப்போது, ‘தோனியின் ஆட்டோகிராப் மேலே என்னால் ஆட்டோகிராப் போட முடியாது. எதற்காக இந்த போனை எடுத்து வந்தீர்கள்? வேறொரு நல்ல பொருளில் நான் ஆட்டோகிராப் தருவேன்’ என்று இஷான் கிஷன் கூறுகிறார்.
கடைசியில் தோனியின் ஆட்டோகிராஃப் கீழே இஷான் தனது ஆட்டோகிராஃப் பதிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் மீது இஷான் கிஷன் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்று, தோனியின் ரசிகர்கள் சிலாகித்து இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket