Home /News /sports /

கோலியின் பேட்டிங் கோளாறுகளை 20 நிமிடங்களில் சரி செய்து விடுவேன் - சுனில் கவாஸ்கர்

கோலியின் பேட்டிங் கோளாறுகளை 20 நிமிடங்களில் சரி செய்து விடுவேன் - சுனில் கவாஸ்கர்

virat kohli

virat kohli

விராட் கோலி தொடர்ந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை யார் வீசினாலும் தொட்டு எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை ஆடுவதென்பது எல்லா வீரர்களுக்கும் கஷ்டம்தான், ஆனால் கோலிக்கு அதுவே ரொம்ப கஷ்டமாக மாறி விட்டது, இந்நிலையில் சுனில் கவாஸ்கர் அவருக்கு உதவ முடியும் என்கிறார்.

மேலும் படிக்கவும் ...
    விராட் கோலி தொடர்ந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை யார் வீசினாலும் தொட்டு எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை ஆடுவதென்பது எல்லா வீரர்களுக்கும் கஷ்டம்தான், ஆனால் கோலிக்கு அதுவே ரொம்ப கஷ்டமாக மாறி விட்டது, இந்நிலையில் சுனில் கவாஸ்கர் அவருக்கு உதவ முடியும் என்கிறார்.

    டெஸ்ட், ஒருநாள், டி20 என்று முச்சொதப்பு சொதப்பி வருகிறார் கோலி, ஆக்ரோஷமாக ஆடுகிறேன் என்று ஆடாமல் விட வேண்டிய பந்துகளையும் அவர் ஆடி அவுட் ஆகிறார், அவரது முன் கால் நகர்வு சரியாக இல்லை, பந்தின் திசைக்கேற்ப அதுவராமல் நேராக வருகிறது, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஸ்விங் பந்துகளை ஆடும்போது அவரது மட்டை பைன் லெக் திசையிலிருந்து வராமல், ஸ்லிப்பின் திசையிலிருந்து வருகிறது, இவையெல்லாம் எப்படி அவரது முந்தைய டெக்னிக்கிலிருந்து மாறியது என்று யாருக்கும் புரியவில்லை, கோலிக்கும் புரியவில்லை.

    இந்நிலையில் சுனில் கவாஸ்கர் தான் கோலியுடன் 20 நிமிடம் செலவிட்டேன் என்றால் அவரது பிரச்சனைகளை தீர்த்து விடுவேன் என்று கூறுகிரார் கவாஸ்கர்.

    சுனில் கவாஸ்கர்


    சுனில் கவாஸ்கர் போல் ஒரு பேட்டரை நாம் உத்தி ரீதியாக செம்மைப் பெற்ற பேட்டரை நாம் காண முடியாது, ஒருமுறை கான்பூரில் மார்ஷல் பவுன்சரில் கவாஸ்கர் பேட் பறந்தது, கேட்ச் ஆகி ஸ்கொயர் லெக் அம்பயர் அருகில் பறந்து விழுந்த பேட்டை எடுத்துக் கொண்டு பெவிலியன் திரும்பிய போது, கவாஸ்கர் அவ்வளாவுதான் என்றார்கள், ஆனால் அடுத்ததாக டெல்லியில் டெஸ்ட் போட்டியின் போது அவரிடம் இது பற்றிக் கேட்டனர், அதற்குக் கவாஸ்கர், “நான் எப்போதும் ஷார்ட் பிட்ச் பந்துகளை மட்டையை உயர்த்தி தடுத்தாடி அதை என் காலின் கீழே விழ வைப்பேன், ஆனால் மார்ஷல் பந்து கொஞ்சம் வேகம் கூடுதலால் பேட் பறந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நான் ஹூக் ஷாட் ஆடப்போகிறேன்” என்றார் கவாஸ்கர்.

    அனைவருக்கும் ஆச்சரியம் கவாஸ்கர் ஹூக் ஷாட் ஆடுவாரா என்று. ஏனெனில் அதுவரை யாரும் பார்த்ததில்லை. அந்த டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் ஹூக் ஷாட் ஆடினார், வெஸ்ட் இண்டீஸ் அணி டீப் ஸ்கொயர் லெக், டீப் பைன் லெக், லாங் லெக் என்று பீல்டிங் செட் செய்து வீசும் அளவுக்கு ஹூக் ஷாட்களை கவாஸ்கர் ஆடி 94 பந்துகளில் டெஸ்ட் சதம் எடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை.

    அவர் நினைத்தால் எந்த ஒரு தவறையும் சரியாகக் கணித்து ஆலோசனை வழங்க முடியும், அவர் கோலி குறித்து கூறியதாவது:

    “நான் அவருடன் சுமார் 20 நிமிடங்கள் இருந்தால் போதும் அவர் செய்ய வேண்டிய விஷயங்களை என்னால் அவரிடம் சொல்ல முடியும். அது அவருக்கு உதவக்கூடும், அது அவருக்கு நிச்சயமாக உதவும் என்று நான் கூறவில்லை, அந்த ஆஃப்-ஸ்டம்பைப் நோக்கி வரும் பந்துகள் குறித்து உதவ முடியும்.

    ஓப்பனிங் பேட்டராக இருந்து இதே பிரச்சனையை நான் சந்தித்ததால் அவருக்கு சில உதவிகள் செய்ய முடியும். கோலி நிச்சயம் தனது பழைய பார்மிற்கு திரும்பி வருவார். நான் சொன்னது போல், அவருக்கு சில தோல்விகள் பாடத்தை கற்று கொடுத்துள்ளன. இந்தியாவுக்கான அவரது சாதனை மிக பெரியது. இதுவரை 70 சர்வதேச சதங்களைப் அடித்துள்ளார். கோலி பொறுமையுடன் இருக்க வேண்டும், இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றிய இந்த ஜாம்பவான்க்கு ஒரு சில தோல்விகளை அனுமதிக்கலாம்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி