Home /News /sports /

மணிக்கு 162, 164 கிமீ வேகமெல்லாம் வீசியிருக்கேன் நீங்கதான் கண்டுக்கல- சொல்கிறார் பாக். வேகப்பந்து வீச்சாளர்

மணிக்கு 162, 164 கிமீ வேகமெல்லாம் வீசியிருக்கேன் நீங்கதான் கண்டுக்கல- சொல்கிறார் பாக். வேகப்பந்து வீச்சாளர்

மொகமட் சமி. பாக். வீச்சாளர்

மொகமட் சமி. பாக். வீச்சாளர்

உம்ரன் மாலிக் என்ற ஒரு இந்திய பந்து வீச்சாளர் மிகவும் சீராக 150 கிமீ வேகத்தில் வீசுகிறார் மணிக்கு 154 கிமீ வேகம் வீசுகிறார், அவரை குறித்து உலக அளவில் பெரிய அளவில் புகழாரங்களும், ஆச்சரியங்களும் குவிந்து வருகிறது, இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பொறுக்குமா? உடனே நான் அத்தனை வீசினேன், இத்தனை வீசினேன் என்று கூறுவது சகஜம் தானே, அப்படித்தான் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொகமட் சமி கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    இவர் மணிக்கு 150 கிமீ வேகம் வரை வீசுவார் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் என்னவென்றால் இப்போது கூறுகிறார் தான் ஏதோ மணிக்கு 162, 164 கிமீ வேகமெல்லாம் வீசியிருக்கிறேன், யாரும் அதை கண்டுக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். ஷோயப் அக்தரும் அப்படித்தான் கிரேட் ஃபாஸ்ட் பவுலர்தான் ஆனால் தற்பெருமை தலைதூக்க சில வேளைகளில் இல்லாததையும் கூறும் பழக்கம் இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது, காரணம் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி.

    இதுவரையிலான அதிவேகப் பந்தை வீசியவர் ஷோயப் அக்தர் இவர் மணிக்கு 161 கிமீ வேகத்தில் வீசிய பந்து ஸ்பீடா மீட்டரில் பதிவாகி அதுதான் இன்று வரை அதிகாரப்பூர்வ ஸ்பீடு ஆகும்.

    இந்நிலையில் பாக் டிவியில் மொகமட் சமி கூறும்போது, “ஒரு மேட்சில் நான் மணிக்கு 162, மற்ரும் 164 கிமீ வேகத்தில் பந்து வீசியிருக்கிறேன். அப்போது பவுலிங் மெஷின் வேலை செய்யவில்லை அதனால் அது சாதனையில் வரவில்லை.

    மணிக்கு 160 கிமீ வேகம் வீசிய பவுலர்களை நீங்கள் பார்த்தீர்களானால் ஒருமுறைதான் அந்த வேகத்தில் வீசியிருப்பார்கள், ஆனால் நான் இருமுறை வீசினேன்” என்றார் மொகமட் சமி.

    மொகமட் சமி ஒருமுறை 156.4 கிமீ வேகத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2003-ல் வீசினார். முல்டானில் சேவாக் முச்சதம் அடித்த போது செஞ்சுரி அடித்த பவுலர்களில் இவரும் ஒருவர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Indian vs pakistan, IPL 2022

    அடுத்த செய்தி