கடைசி ஓவரில் சிங்கிள் ஏன் ஓடவில்லை? தினேஷ் கார்த்திக் விளக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. #INDvNZ

கடைசி ஓவரில் சிங்கிள் ஏன் ஓடவில்லை? தினேஷ் கார்த்திக் விளக்கம்!
தினேஷ் கார்த்திக். (AFP)
  • News18
  • Last Updated: February 14, 2019, 1:53 PM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியின் கடைசி ஓவரில் சிங்கிள் ரன் ஓட மறுத்தது ஏன் என தினேஷ் கார்த்திக் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி சாதனை படைத்தது.

அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.


Indian Team, இந்திய அணி
இந்திய அணி தோல்வி. (BCCI)


கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் ஓடியிருக்கலாம், ஆனால் தினேஷ் கார்த்திக் ஓடவில்லை. தானே நின்று சிக்சர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி செய்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், கடைசி ஓவரில் சிங்கிள் ரன் ஓட மறுத்தது ஏன் என தினேஷ் கார்த்திக் புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில், “நானும், க்ருனல் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினோம். எதிரணி பந்துவீச்சாளர்களும் அழுத்தத்தில் இருந்ததால் வெற்றியை நெருங்கினோம். நான் சிக்சர் அடிக்க முடியும் என்று உண்மையிலேயே நம்பினேன். அதனால்தான் ஒரு ரன்னுக்காக ஓடவில்லை,” என்று அவர் கூறினார்.
Dinesh karthik, தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். (BCCI)


தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.

முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Also Watch...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்