Home /News /sports /

தரம்சலாவிலேயே தெரிந்து விட்டது ரஹானே பிறவி கேப்டன் என்று... : இயன் சாப்பல் பாராட்டு மழை

தரம்சலாவிலேயே தெரிந்து விட்டது ரஹானே பிறவி கேப்டன் என்று... : இயன் சாப்பல் பாராட்டு மழை

ஆட்ட நாயகன் ரஹானே.

ஆட்ட நாயகன் ரஹானே.

2017 தரம்சலா டெஸ்ட் போட்டியில் ரஹானே செய்த ஒரு சாதுரியமான முடிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அது இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ்வை பந்து வீச அழைத்தது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ரஹானே தலைமை இந்திய அணி பந்தாடியதில் தனக்கு ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் ரஹானே ஒரு பிறவி கேப்டன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் சாப்பல் விதந்தோதியுள்ளார்.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:

    எம்சிஜியில் ரஹானே அப்பழுக்கற்ற கேப்டன்சி மேற்கொண்டது எனக்கு எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.

    தரம்சலா டெஸ்ட் போட்டியில் 2017ம் ஆண்டு ரஹானே கேப்டன்சியை பார்த்தவர்களுக்கு நிச்சயம் ரஹானேவின் தலைமைத்துவம் மீது சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அப்போது கிரிக்கெட் அணிகளை வழிநடத்தும் பிறவி கேப்டன் என்பதை அவர் நிரூபித்தார்.

    2017 தரம்சலா டெஸ்ட் போட்டியில் ரஹானே செய்த ஒரு சாதுரியமான முடிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அது இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ்வை பந்து வீச அழைத்தது. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் சதக்கூட்டணி அமைத்தனர்.

    அப்போது நான் இதனை தைரியமான முடிவு, மிகவும் புத்திசாலித்தனமான முடிவு என்று கூறினேன். யாதவ் உடனேயே வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் இந்திய அணி 5 விக்கெட்டுகளில் அந்த டெஸ்ட் போட்டியையே வென்றது.

    தைரியம் புத்திசாலித்தனம் தவிர ரஹானேவிடம் காணப்படும் இன்னொரு அம்சம் விஷயங்கள் கையைவிட்டு நழுவும் போது அமைதியாக செயல்படுகிறார்.

    அணி வீரர்களின் மரியாதையைச் சம்பாதித்து வைத்துள்ளார். இது தான் தலைமைத்துவத்தின் முக்கியமான ஒரு அம்சம். தேவைப்படும் போது ரன்கள் குவித்து அணியை மீட்கிறார், இதுதான் அணி வீரர்களிடத்தில் அவர் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது.

    2-0 என்று சுலபமாக இந்தியா பின்னடைவு காணும் என்ற நிலையில் கேப்டனின் சதம் அணியை மீட்டெடுக்கிறது. இந்தச் சதம் ரஹானேவின் கேப்டன்சியை விளக்குகிறது. ரஹானே கேப்டன்சி அணிக்கான ஒரு கேப்டன்சி.

    கோலி-ரவிசாஸ்திரி ஆகியோரின் கூட்டணி உருவாக்கிய ஸ்பிரிட் ரஹானேவின் அமைதியால் ஈடுசெய்யப்படுகிறது. கடந்த முறை போல் இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்புள்ளது.

    இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ajinkya Rahane, India vs Australia

    அடுத்த செய்தி