நான் ஒன்றும் முட்டாள் அல்ல: வாசிம் அக்ரம் திடீர் ஆவேசம்

அக்ரம்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்டுமான வாசிம் அக்ரம் பயிற்சியாளர்களை வீரர்கள் அவமதிப்பது, ரசிகர்கள் அவமதிப்பது போன்றவற்றுக்கு எதிராக ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 • Share this:
  சமீபத்தில், சூதாட்டத்தில் சிக்கி சிறைக்குச் சென்று திரும்பி மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்த திறமை வாய்ந்த ஸ்விங் பவுலர் மொகமட் ஆமிர், பயிற்சியாளர்கள் மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் என்று தனக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை மேலும் தன்னை மிகுந்த தொல்லைக்குள்ளாக்கினர் என்று குற்றம்சாட்டியதை மனதில் கொண்டு வாசிம் அக்ரம், பயிற்சியாளர்களை வீரர்கள் மரியாதை குறைவாக அணுகுவது குறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.

  கிரிக்கெட் பாகிஸ்தான் யூடியூப் சேனலில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

  பாகிஸ்தான் என்று அல்ல, எந்த ஒரு அணியுடன் பயிற்சியாளராக இணைந்தாலும் ஆண்டுக்கு 200-250 நாட்கள் செலவிட வேண்டி வரும். பாகிஸ்தானிலிருந்தும் குடும்பத்தை விட்டும் என்னால் அவ்வளவு நாட்கள் செலவிட முடியாது, அதனால்தான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவில்லை. மற்றபடி விமர்சனங்களுக்கு பயந்து அல்ல. பொதுவாக வீரர்கள் எதுவும் சந்தேமிருந்தால் என்னிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கின்றனர். நான் அவர்களுக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

  இரண்டாவதாக நான் ஒன்றும் முட்டாள் அல்ல. நானும் சமூக ஊடகங்களைப் பார்ப்பவன் தான், அதில் வீரர்கள் பயிற்சியாளர்களை அவமதிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பயிற்சியாளரா களத்தில் இறங்கி ஆட முடியும்? வீரர்கள்தான் ஆட வேண்டும். பயிற்சியாளரின் வேலை திட்டமிடுதல் மட்டும்தான். அணி தோற்றுப் போனால் முழுதும் பயிற்சியாளர் எப்படி பொறுப்பாக முடியும்? இப்படி பயிற்சியாளர்களுக்கு எதிராக முட்டாள்தனமான பேச்சுகளை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

  நானும் செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், நான் பாகிஸ்தான் வாரியத்தைக் கட்டுப்படுத்துவதாக எந்த நிருபர் எழுதுகிறார் என்பதையும் அறிவேன். ஆனால் நம்பகத்தன்மையுள்ள பத்திரிகையாளர்கள் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நடத்த எனக்கு நேரமில்லை, எனக்கு கவுரவப் பதவி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு பேசியுள்ளார் வாசிம் அக்ரம்.
  Published by:Muthukumar
  First published: