ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!

‘I am just 21, difficult to think like a 30-year-old man’ - #RishabhPant | ரிஷப் பண்ட்-ன் உலகக்கோப்பை கனவு இன்னும் முடிந்துவிடவில்லை.

ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!
அம்பயரிடம் அவுட் கேட்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (BCCI)
  • News18
  • Last Updated: May 7, 2019, 8:13 PM IST
  • Share this:
தனது திறமையை நிரூபிக்க கால அவகாசம் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 வயதேயான அவர், கிரிக்கெட் உலகை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அடுத்தடுத்த தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடித்த இவருக்கு, உலகக்கோப்பைக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட்-க்கு போதிய அனுபவம் இல்லை என்ற கருத்து பரவலாக எழுந்தது.


Rishabh Pant, DC, IPL
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரிஷப் பண்ட். (BCCI)


இதனை அடுத்து, ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். ஒரு சில போட்டிகளில் அதிரடியாக ஆடினாலும், போட்டியின் தன்மைக்கு ஏற்ப அவர் விளையாடுவதில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான நேரத்தில் தேவையற்ற ஷாட்டுகளை அடித்து அவுட்டாவதால் கிரிக்கெட் ரசிகர்களும் ரிஷப் பண்ட் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.
Rishabh Pant, ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட். (DC)


“ஒரு நாள் இரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தனக்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது. 30 வயதுள்ளவர் போல யோசிப்பது கடினம். என்னுடைய மனம் வலிமை பெறும். அதற்கு தனக்கு கூடுதல் கால அவகாசம் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட்-ன் உலகக்கோப்பை கனவு இன்னும் முடிந்துவிடவில்லை. கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading