Home /News /sports /

இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிட்டிருக்கு- கோலியின் மைண்ட் வாய்ஸ்

இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிட்டிருக்கு- கோலியின் மைண்ட் வாய்ஸ்

கங்குலி - கோலி

கங்குலி - கோலி

விராட் கோலி 11, 15 ஸ்கோரைத் தாண்டுவாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அலைமோத வணிகமயமான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அவர் வருவார், பார்முக்கு வருவார் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்துள்ளார், இது இந்திய கிரிக்கெட்டுகு அளிக்கும் நம்பிக்கையா அல்லது கோலியின் ஸ்பான்சர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையா என்பது ஆய்வுக்குரியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விராட் கோலி 11, 15 ஸ்கோரைத் தாண்டுவாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அலைமோத வணிகமயமான பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அவர் வருவார், பார்முக்கு வருவார் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்துள்ளார், இது இந்திய கிரிக்கெட்டுகு அளிக்கும் நம்பிக்கையா அல்லது கோலியின் ஸ்பான்சர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையா என்பது ஆய்வுக்குரியது.

    இதையெல்லாம் பார்த்துக் கோலி, வின்னர் வடிவேலு பாணியில், ‘இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிட்டிருக்கு’ என்று நினைத்தாலும் நினைக்கலாம். ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்காமல் சொத்தை அணிகளுக்கு எதிராக அடித்து விட்டு ஆஹா பார்முக்கு வந்து விட்டார் என்று கூக்குரல்களை ஊடகங்கள் எழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இந்த ஆண்டு 19 போட்டிகளில் அவர் வேண்டாம் என்று உட்கார்ந்திருக்கிறார், ஆனால் அவருக்கு தேடித் தேடி வாய்ப்பு அனைத்துப் போட்டிகளிலும் ஆடுபவர்கள் தலை மேல் கத்தி, இதுதான் இந்திய அணியில் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் கங்குலி கூறும்போது, “அவர் பயிற்சி செய்யட்டும். போட்டிகளில் ஆடட்டும். பெரிய பிளேயர், நிறைய ரன்கள் எடுத்துள்ளார். நிச்சயம் அவருக்கு கம்-பேக் உண்டு. அவரால் சதம் அடிக்க முடியவில்லை, எனவே ஆசியக் கோப்பையில் அவர் நிச்சயம் பார்முக்குத் திரும்புவார்” என்கிறார் கங்குலி.

    கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் அரைசதம் எடுத்தார் கோலி, ஆனால் அவரால் அதில் சரியாக ஆட முடியவில்லை. இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் செம உதை வாங்கியது.

    ஆகஸ்ட் 28ம் தேதி கோலி அடிக்கவில்லை எனில் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய வெறுப்பையே சம்பாதித்துக் கொள்வார் என்று கிரிக்கெட் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia Cup cricket series, Virat Kohli

    அடுத்த செய்தி